இலண்டன் ஒலிம்பிக் 2012

2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (2012 Summer Olympics), அலுவல்முறையில் 30வது ஒலிம்பியாட்டின் விளையாட்டுக்கள் (Games of the XXX Olympiad) அல்லது இலண்டன் 2012 ஓலிம்பிக் விளையாட்டுக்கள் வருகிற சூலை 27, 2012 முதல் ஆகஸ்டு 12, 2012 வரை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலண்டன் மாநகரத்தில் நடைபெற இருக்கிறது. தற்கால உலக ஒலிம்பிக் விளையாட்டை மூன்றாவது முறையாக நடத்தும் பெருமையை இலண்டன் மாநகரம் பெறுகிறது.[1][2]1908 மற்றும் 1948 ஆண்டுகளில் இருமுறை இங்கு இவ்விளையாட்டுக்கள் நடத்தப்பட்டுள்ளன. [3][4]

1944 ஆண்டு இங்கு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி இரண்டாவது உலகப்போர் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதன்மூலம் அதிகமுறை ஒலிம்பிக் போட்டி நடத்திய நாடுகள் வரிசையில் இரண்டாவது இடம் பிடித்தது. முதலிடத்தில் நான்கு முறை (1904, 1932, 1984, 1996) ஒலிம்பிக் நடத்திய அமெரிக்கா உள்ளது. ஜெர்மனி (1936, 1972), ஆஸ்திரேலியா (1956, 2000), பிரான்ஸ் (1900, 1924), கிரீஸ் (1896, 2004) ஆகிய நாடுகள் தலா இரண்டு முறை ஒலிம்பிக் போட்டி நடத்தி உள்ளன.

இதுவரை லண்டன் (இங்கிலாந்து), லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா), பாரிஸ் (பிரான்ஸ்), ஏதென்ஸ் (கிரீஸ்) ஆகிய நகரங்கள் தலா இரண்டு முறை ஒலிம்பிக் போட்டியை நடத்தி உள்ளன. இதன்மூலம் அதிகமுறை ஒலிம்பிக் போட்டி நடத்திய நகரம் வரிசையில் முதலிடத்தை பகிர்ந்து கொண்டு உள்ளன. ஆனால் 2012 ஒலிம்பிக் போட்டிக்கு பின் லண்டன் நகரம் முதலிடத்தை தனித்து பிடிக்க உள்ளது.

சூலை 6, 2005இல் சிங்கப்பூரில் நடைபெற்ற 117வது கூட்டத்தில் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவால் நான்கு சுற்று வாக்களிப்புக்குப் பின் இலண்டன் தேர்ந்தெடுக்கப்பட்டது. 2012 ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு மாஸ்கோநியூயார்க் நகரம்மாட்ரிட் மற்றும் பாரிசுஆகிய நகரங்கள் விண்ணப்பித்திருந்தன.[5] வெற்றிபெற்ற ஏலத்திற்கு முன்னாள் ஒலிம்பிக் சாதனையாளர் செபாஸ்டியன் லார்டு கோ தலைமையேற்றிருந்தார்.

இந்த விளையாட்டுக்களுக்கான நிதிநிலை பரிசீலனைகள் மிகுந்த சர்ச்சைக்கு இடமளித்தன[6][7] எனினும் இலண்டனின் பல்வேறு பகுதிகள் பேண்தகு வளர்ச்சி நோக்கத்துடன் மேம்படுத்தப்படுவதால்[8] வரவேற்பும் இருந்தன. விளையாட்டுக்களின் முகனையான குவியமாக புதியதாக கட்டமைக்கப்பட்டு வரும் ஒலிம்பிக் பூங்கா உள்ளது. இது கிழக்கு இலண்டனில் ஸ்ட்ராஃபோர்டில் முன்பு தொழிற்பேட்டையாக விளங்கிய 200 எக்டேர் நிலத்தில் அமைக்கப்படுகிறது.[9] ஏலத்திற்கு முன்பே இருந்த விளையாட்டரங்கங்களை ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கும் மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

http://ta.wikipedia.org/wiki/2012_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

http://www.london2012.com/about-us/index.html

Tags: ,

Leave a Reply