இறைவனை வெல்ல முடியுமா ?

moulaviumarjahfer1இறைவனை வெல்ல முடியுமா ?

ஆக்கம் : முதுவைக் கவிஞர் ஹாஜி அ. உமர் ஜாஃபர் பாஜில் மன்பயீ

 

பிறந்தவனை இறந்திடாமல் வைக்கவும் முடியாது !

பிறந்தவனின் வாழ்நாளைக் குறிக்கவும் முடியாது !

இறந்தபின்னே உயிர்கொடுத்து எழுப்பவும் முடியாது !

இறைவனுக்கு இணையாக எதுவுமே முடியாது !

பிறந்தமனிதன் செல்வந்தனா ? சொல்லவும் முடியாது !

பணமில்லாத எளியவனா ? கூறவும் முடியாது !

நிறைந்தசுகம் கொண்டவனா ? நினைக்கவும் முடியாது !

நாயன்விதியை எவரினாலும் கணிக்கவும் முடியாது !

அறிவுக்கீர்த்தி உள்ளவனா ? அறியவும் முடியாது !

அகிலம்புகழும் நல்லவனா ? தெரியவும் முடியாது !

புரியும்போரில் வல்லவனா ? புரியவும் முடியாது !

படைத்தயிறைவன் ஒருவனன்றி விளங்கவும் முடியாது !

வாய்திறந்து பேசுவதை நம்பவும் முடியாது !

வாய்ச்சொல்லைக் கேட்பதையும் நம்பவும் முடியாது !

தாய்ச்சொல்லில் வாழுவதைச் சொல்லவும் முடியாது !
தகுதியுள்ள இறைவிதியை வெல்லவும் முடியாது !

தீன்வழியில் நடப்பவனா ? சொல்லவும் முடியாது !

தீயவழியில் செல்பவனா ? மாற்றவும் முடியாது !

வீண்வழியில் நிற்பவனா ? தடுக்கவும் முடியாது !

வாழ்வைக்கும் இறைவனன்றி கொடுக்கவும் முடியாது !

மனுகுலத்து வாழ்வுதனை அறியவும் முடியாது !

மனிதவாழ்வை மனிதனாலே அமைக்கவும் முடியாது !

மனிதரெல்லாம் இறைவிதியை வெல்லவும் முடியாது !

மனிதனாலே இறைவனையும் வெல்லவும் முடியாது !

( குர்ஆனின் குரல் மார்ச் 2013 இதழிலிருந்து )

முதுவை கவிஞர் எழுதிய இறுதிக் கவிதை

Tags: 

Leave a Reply