இறவா நட்பு

 
நிலைகுழைந்து நிற்கும்போது
நிலைமையறிந்துமறியாமல்
நகர்ந்துவிடும் சுயநலத்தைபோல்
நகர்ந்துவிடுவதல்ல நட்பு
 
நம்பிக்கையின் உச்சம்
மனவுணர்வுகளின் அதிசயம்
நூலிடையின் நுண்ணறிவு
இதயத்தின் இங்கிதம்
எல்லமீறா நிதானிப்பு
 
இப்படியான நட்பு
இல்லாமையிலும்
இயலாமையிலும்
இன்பத்திலும் துன்பத்திலும்
இன்னலிலும் இடைஞ்சலிலும்

எதற்கும் கலங்கவிடாது
எள்ளளவும் களங்கிவிடாது
என்றென்றும் உயிர்த்திருக்கும்
என்றுமே!
இறவாமல் நிலைத்திருக்கும்…
 
அன்புடன் மலிக்கா
துபை

http://niroodai.blogspot.com

Tags: , ,

Leave a Reply