இராமநாதபுரத்தில் தொடரும் காவல்துறை அராஜகம்.தமிழக அரசு தலையிட வேண்டும்

எஸ்.டி.பி.ஐ கட்சி வேண்டுகோள்

 

இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட பொதுச்செயலாளர் பி.எஸ்.ஐ.கனி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 

சமீப காலமாக இராமநாதபுரத்தில் அப்பாவி முஸ்லீம்கள் மீது பொய்வழக்கு புனைவதும்,விசாரனை என்ற பெயரில் சட்டவிரோதமாக முஸ்லீம்களை அழைத்து சென்று நீண்ட நேரமாக காவல்நிலையத்தில் வைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்குவதும் தொடர்கிறது

 

இந்நிலையில் இன்று மாலை கேணிக்கரை காவல்நிலையத்திற்கு தமது உறவினர் மீதான வழக்கு பற்றி விவரம் கேட்க சென்ற இரு  முஸ்லீம் இளைஞர்களை, விசாரனை செய்ய வேண்டும் என கூறி கேணிக்கரை காவல்துறையினர் சட்டவிரோதமாக தடுத்து வைத்துள்ளனர்.

 

நீண்ட நேரமாகியும் விடுவிக்காத்தால் அவர்களது உறவினர்கள் முறையிட்டதை தொடர்ந்து ,இது குறித்து தகவல் பெறுவதற்காக எஸ்.டி.பி.ஐ நகர் செயலாளர் கேனிக்கரை காவல்நிலையம் சென்ற போது அதிரடிப்படையினர் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர்.மேலும் சட்டவிரோதமாக  தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இரு இளைஞர்களை சந்திக்கவும் அனுமதி மறுத்துள்ளனர்.அவர்களை பார்க்க யாரையும் அனுமதிக்க கூடாது என ஏ.டி.எஸ்.பி உத்தரவிட்டுள்ளார் என்று அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி இது குறித்து விவரம் தெரிவிக்க மறுத்து விட்டார். 

 

இராமநாதபுரத்தில் நடக்கும் பெரும்பான்மையான குற்றச்செயல்களில் உண்மை குற்றவாளிகளை காவல் துறை தப்ப விடுவதும்,அப்பாவி முஸ்லீம் இளைஞர்களை கைது செய்து வழக்கில் சேர்ப்பதும் தொடர்கதையாகி வருகிறது.கேணிக்கரை காவல்துறையினர் தங்களது இயலாமையை மறைக்க  சட்டவிரோதமாக அப்பாவி இளைஞர்களை குறிவைத்து கைது செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கது.

 

ஆகவே தமிழக அரசு இவ்விசயத்தில் தலையிட்டு அப்பாவி இளைஞர்களை சட்டவிரோதமாக கைது செய்யும் கேணிக்கரை காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.மீண்டும் இது போன்று சட்டவிரோத செயல்களில் ஈடுபடாமல் இருக்க இராமநாதபுரம் காவல்துறையினருக்கு அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 


மேலும் விபரங்களுக்கு..,

 

சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா(SDPI)

இராமநாதபுரம் மாவட்டம்

 

மாவட்ட அலுவலகம்:

இரண்டாவது தளம்,இளங்கோ அடிகளார் தெரு

வழிவிடு முருகன் கோவில் பின்புறம்

இராமநாதபுரம்

 

தொடர்புக்கு:

 

+91 96558 09510 , 94420 48976

இணைய தளம் : www.sdpitamilnadu.org

Tags: , , ,

Leave a Reply