இயக்குநர் பிரம்மாவுடன் கலந்துரையாடல்

இயக்குநர் பிரம்மாவுடன் கலந்துரையாடல்

08-04-2017, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு

பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர், அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.

நண்பர்களே தமிழ் சினிமாவின் நூற்றாண்டும் கொண்டாடும் வகையில் தமிழ் ஸ்டுடியோ நடத்தி வரும் நூறு கலைஞர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் எதிர்வரும் சனிக்கிழமை இயக்குநர் பிரம்மா பங்கேற்க உள்ளார். தேசிய விருது பெற்ற குற்றம் கடிதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிரம்மா தற்போது ஜோதிகா நடிப்பில் மகளிர் மட்டும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். திரைப்படங்களில் இருக்க வேண்டிய சமூக அக்கறை, திரைக்கதை அமைப்பு, இயக்குனரின் நுட்பமான அணுகுமுறை உள்ளிட்டவை குறித்து இயக்குநர் பிரம்மாவுடன் நண்பர்கள் கலந்துரையாடலாம். 

அனுமதி இலவசம், அனைவரும் வருக…

Tags: , ,

Leave a Reply