இமாம் ஷாஃபிஈ மகளிர் அரபு கல்லூரி, உடன்குடி

சென்னை வாழ் (உடன்குடி)
காலங்குடியிருப்பு ஜும்ஆ பள்ளி
நிர்வாக நல் வாழ்வு சங்கம்
‘ராயல் ஹவுஸ்’ முதல் மாடி, 75, ஹாரிஸ் ரோடு, புதுப்பேட்டை, சென்னை – 600 002.
போன் : 044 – 28518221, 93833 67005,

 

சங்கத்தின் செயல்பாடுகள்
சென்னை வாழ் காலங்குடியிருப்பு ஜும்ஆ பள்ளி மஹல்லாவைச் சார்ந்தவர்களால் நமது மஹல்லாவும், ஊரும் பயன்பெறும் வகையில் 1990-ம் ஆண்டு மார்ச் மாதம் 4-ம் தேதி ஆரம்பிக்கப்பட்டதுதான் இச்சங்கம்

அல்லாஹ்வின் பேரருளால் 25 ஆண்டுகளாக கீழ்காணும் சேவைகளை மிகச் சிறப்பாக செய்து வருகிறது. அல்ஹம்து லில்லாஹ்.

 

1. சாலிஹாத் டிரஸ்ட் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
2. பைத்துல் மால் அமைப்பு செயல்படுத்தப்படுகிறது.
3. கூட்டு குர்பானி திட்டம் நடைபெறுகிறது.
4. கல்விக்கு உதவி தொகை அளிக்கப்படுகிறது.
5. பெண்களுக்கு மார்க்க கல்வியை வழங்குவதற்காக இமாம் ஷாஃஈ மகளிர் அரபு கல்லூரி பெரிய அளவில் சீராக நடைபெறுகிறது
6. டிரஸ்ட்டுக்கென்று பெரும் வெகுமதியான அசையா சொத்து, தூத்துக்குடியில் உள்ளது.
இவைகளெல்லாம் அல்லாஹ்வின் பேரருளால் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இன்ஷா அல்லாஹ் அடுத்து செயல்படுத்த நாடியிருக்கும் திட்டங்கள் :

1. ஆலிம் பட்டத்துடன் பட்டப்படிப்பினை படிப்பதற்காக, அதாவது மௌலவி கல்வி கற்பதுடன் B.A, B.com., B.Sc.,, போன்ற பட்ட படிப்பினையும் படிப்பதற்காக கல்லூரி ஆரம்பிக்க முயற்சி
வேண்டுதல் :
நமதூர் முழுவதும் பயன்பெற வேண்டுமென்ற நன்னோக்கத்தில்தான் இச்சங்கம் செயல்பட்டு வருகிறது. உங்களிடம் வேண்டுவதெல்லாம் உங்களுடைய மேலான ஒத்துழைப்பும், ஆக்கமும், ஊக்கமும், நல்ல ஆலோசனைகளையும் வழங்குவதோடு, அல்லாவிடம் துஆ செய்யுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

டிரஸ்ட் / பைத்துல்மால்

சாலிஹாத் டிரஸ்ட் முறையாக ரிஜிஸ்ட்டர் செய்யப்பட்டு இயங்கி வருகிறது.
கவுன்சிலிங் மூலமாக புரஃபசனல் கோர்ஸில் குசநந சீட் கிடைக்கும் நமதூர் மாணவர்களின் கல்வி செலவுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது.

மேலும், பள்ளிப்படிப்புக்கு, மாணவ மாணவிகளுக்கு கல்வி கட்டணத்திற்கு உதவியும் செய்யப்படுகிறது.

சமுதாயத்தில் சிறு தொழில்கள் செய்பவர்கள் மார்க்கத்திற்கு புறம்பான வகையில் வட்டி வாங்கி தொழில் செய்து அதை திருப்பிக் கொடுக்க முடியாமலும், தொழில் நல்ல முறையில் நடைபெறாமலும், சிரமப்படுபவர்களுக்கு நமது டிரஸ்டின் சார்பில் வட்டி இல்லா கடன் கொடுத்து வட்டியில் இருந்து சிலரை விடுவித்தும் அத்துடன் சிறு தொழில்களுக்கு கடனும் கொடுத்து உதவி வருகிறது.

பைத்துல் மால் சார்பில் கூட்டு குர்பானி திட்டம் 20 ஆண்டுகளாக மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.

பைத்துல் மால் சார்பில் ரமளான் மாதம் சுமார் 150 நபர்களுக்கு ஆடைகள், பணம், அரிசி வழங்கப்பட்டு வருகின்றது.

இமாம் ஹாஃபிஈ மகளிர் அரபு கல்லூரி

அல்லாஹ்வின் கிருபையால் நம் மகளிர் அரபு கல்லூரி ஆலிமா பட்டப்படிப்பிற்கான நான்கு ஆண்டு பாடத்திட்டத்தின் கீழ் 2000-ம் வருடம் முதல் 14 ஆண்டுகளாக மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது.
மார்க்கக் கல்வியுடன் தொழிற்பயிற்சியும், கம்ப்யூட்டர் படிப்பும் மாணவிகளுக்கு கற்பித்து கொடுக்கப்படுகிறது.
இது வரையிலும் 50 மாணவிகளுக்கு ஆலிமா “முஸ்லிஹா” என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பட்டம் பெற்று செல்லும்போது பல பரிசுகளுடன் தையல் மிஷினும், அன்பளிப்பு செய்யப்படுகிறது.
தற்போது 50 மாணவிகள் ஆலிமா கல்வி பயின்று வருகின்றனர்.
ஹாஸ்டலில் 15 மாணவிகள் தங்கி பயின்று வருகிறார்கள்,
ஹாஸ்டல் மாணவிகளுக்கு நமதூர் மக்களால் தினசரி உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மாணவிகளின் பேச்சாற்றலை வளர்ப்பதற்கு “லஜ்னத்துல் இஸ்லாஹ்” சொற் பயிற்சி மன்றம் அரபியிலும், தமிழிலும், வாரம் ஒரு முறை நடைபெறுகிறது. ஆண்டுதோறும் உள்ளூர் மாணவிகளுக்கு வேண்டி கோடை வகுப்புகள் நடைபெறுகின்றன.
தலமை ஆசிரியர், ஆறு ஆசிரியைகள் மற்றம் மூன்று ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றுகின்றனர்.
அன்னை ஆயிஷா தையல் பயிற்சி மூலம் நமதூரில் தையல் தெரியாத இளம் பெண்களே இல்லை என்ற அளவிற்கு தையல் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.

அல்ஹம்துலில்லாஹ்

 

இதைப் பார்க்கும் நல்லுள்ளம் கொண்ட சகோதரர்கள் உங்களுடைய ஜகாத் மற்றும் நன்கொடைகளை தாராளமாக அனுப்பித் தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்..
ஜகாத் பணம் அனுப்ப வேண்டிய முகவரி:
IMAM SHAFIYI WOMEN’S ARABIC COLLEGE,
CANARA BANK UDANGUDI BR,
A/C NO.1125101287842, IFSC NO.CNRB0001125
முகவரி:
இமாம் ஷாஃபிஈ மகளிர் அரபு கல்லூரி,
91A பெரிய தெருஉடன்குடி-628203,
தூத்துக்குடி மாவட்டம்
Tags: ,

Leave a Reply