இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுகுளத்தூர் (கிளை) உதயத்திற்காய்.. இதய வாழ்த்து !

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

முதுகுளத்தூர் (கிளை) உதயத்திற்காய்..

இதய வாழ்த்து !

 

 

ஐஓபியே … !

உன் வருகையால்

எங்கள் மனதோடு மரபு அணுக்களும்

மகிழ்வால் துள்ளுகிறது !

 

இந்தியாவில்..

எங்கெங்கோ .. (1893)

கிளைகள் பரப்பிய நீ …

இப்போது ..

எங்கள் மூதூர் முதுகுளத்தூரிலும்..!

 

உன் கிளையின் சேவை

இந்த வட்டார மக்களுக்கு ..

கிழக்கின் வெளிச்சம்போல அமையும் !

கந்து வட்டிக்கும்

மீட்டர் வட்டிக்கும் ..

நீ வந்துதான்

மரணஅடி கொடுக்கிறாய் !

நடுத்தரவர்க்க மக்களுக்கு ..

இனி … நல்லகாலம் தான் !

 

ஆமாம் …?

உனக்கு 75 வயதாமே …!

இதன் நினைவாக ஒரே நாளில்..

75 புதிய கிளைகள் திறப்பாமே ..!

 

ஆயிரம் கிளைகள் கண்டு

அவணியில் வாழ்க !

ஓவியப்புன்னகையாய்

உற்சாகம் பெறுக !

வாழ்க உன் எண்ணம் !

வளர்க உன் சேவை !

 

 

 

 

வாழ்த்துக்களுடன்

 

முதுகுளத்தூர்.காம்

 

 

 

02.02.2011

Tags: ,

Leave a Reply