இது தான் நோன்பு

 

( பொற்கிழிக் கவிஞர்  மு ஹிதாயத்துல்லா, இளையான்குடி )

அழைக்க : 99763 72229

 

 • படைத்த ரப்பின்

பாசமுகவரிகளே…!

 

 • இல்லாமையால்

பட்டினி சரிதான் !

ஆனால்..

இருந்தும் பசித்திருக்கிறோமே !

வல்ல அல்லாஹ்வுக்காக

பசித்திருக்கிறோமே…!

இது தான் நோன்பு !

 

 • எப்படியோ

கரையும் பொழுதுகளை

இபாதத்தால்

கண்ணியப்படுத்துகிறோமே..!

இதுதான் நோன்பு !

 

 • இறையச்சமின்னலில்

தவறுகள் ஏதும்

செய்யாதிருக்கிறோமே..!

இதுதான் நோன்பு !

 

 • கலிமாவால்

நாவை நனைத்து

ஹக்கனின் நினைவை

கல்பினில்

அதிகம் சேர்க்கிறோமே..!

இதுதான் நோன்பு !

 

 • ஏழை வீதிகளுக்கும்

ஈகை அனுப்புகிறோமே..!

அவர்களுக்காக கொஞ்சம்

ஈரம் கசிகிறோமே..!

இதுதான் நோன்பு !

 

 • புன்னகை

எல்லோருக்கும் என்று

சொல்லவருகிறதே

புவனம் மகிழ்கிறதே..!

இதுதான் நோன்பு !

 

 • இந்த நோன்பு

சும்மா.. வருவதில்லை !

நமக்காக

சுகம் அள்ளி வருகிறது !

 

 • படைத்த ரப்பின்

உவப்பை நமக்குப்

பெற்றுத்தர வருகிறது !

 

 • மண் வெட்டியால்

நிலத்தைச் சரிப்படுத்துவோம் !

நோன்பு

நம்மைச் சரிப்படுத்த

வருகிறது !

 

 • வழி கெடுக்கும்

ஷைத்தானுக்கும்

விலங்கிட்டு வருகிறது !

 

 • புவனம் படிக்க

பாடமாய்.. வருகிறது !

சுவனத்தின் நிழலை

நமக்குச்

சொந்தமாக்க வருகிறது !

 

 • நோன்பிருந்து

மாண்படைவோம் !

மாண்பாலே

நாம் உயர்வோம் !

 

 • ஆன்மீகப் பயனடைவோம் !

அல்லாஹ்வின்

அருள் பெறுவோம் !

Tags: 

Leave a Reply