ஆரோக்கியம், தூய்மை மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுதலை

 “ஆரோக்கியம், தூய்மை மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுதலை”

கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைகழகம், சமூக பணியியல் துறையின் முதலாம் ஆண்டு மாணவர்களின் குழுத் திட்டத்தின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் கோயம்புத்தூரின் பல இடங்களில் நடைபெற்றுவருகிறது. இதில் மாணவர்கள் அப்துல் ஆரிப் மற்றும் கார்த்தியாயினி ஆகிய இருவரின் குழுதிட்டதின் ஒரு பகுதியாக 27.12.2017 அன்று கோவை எட்டிமடை பகுதியில் அமைந்துள்ள AIDS நோயாளிகளின் காப்பகமான “அசீசி ஸ்நேஹாலயா”- வில் AIDS-ஆல் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு “ஆரோக்கியம், தூய்மை மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுதலை” என்ற தலைப்பிலே காலை 10 மணியளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் ஆரோக்கியம் மற்றும் தூய்மை என்ற தலைப்பிலே “தூய்மை இந்தியா திட்டத்தின் கோயம்புத்தூர் மாநகர Brand Ambassador-ம், கோயம்புத்தூர் மாநகர தெற்கு பகுதியின் NGO ஒருங்கிணைப்பாளருமான திரு. அப்துல் ஹக்கீம் அவர்கள் விழிப்புணர்வு உரை ஆற்றினார்.

அடுத்ததாக “கவலையில் இருந்து விடுதலை” என்ற தலைப்பிலே உளவியல் நிபுணர் திரு. முஹம்மது இஸ்மாயில் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வை Fr. Sheiju அவர்கள் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வின் இறுதியாக குழந்தைகள் மற்றும் மாணவர்களின் கலை நிகழ்வோடு நிகழ்ச்சி நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் AIDS-ஆல் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் நோயாளிகள் என 50-க்கும் மேற்ப்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

Tags: , ,

Leave a Reply