ஆயுள் verses ஆயில்

நாய் விற்ற காசு குறைக்காது என்பர்
நிஜமான பழமொழிதான்
எண்ணெய் விற்ற காசு?
எரியும் கொழுந்துவிட்டு எரியும்

பற்றி எரியும் நெருப்பை அணைக்காவிட்டால்
பக்கம் இருக்குமோரையும் அது அணைத்துக்கொள்ளும்
எரியும் நெருப்புக்கு நீதி நியாயம் ஏது
எரிந்த உயிருக்கு எல்லாம் விலைதான் ஏது?

தொலைவில் தெரிவது அனல் காற்று
தொடர்ந்து எரிந்திடும் துயர் காற்று
எண்ணெய் ஒரு எரி பொருள் நாம் அறிந்தவரை
எண்ணைக்காக எரிக்கப்பட்ட தேசங்கள்?

என்னிலே அடங்காதவை அதை நாம் அறிவோமா?
நிகழ்கால வரலாறே உண்டு அதற்கு
பைங்கிளிகள் பல ராகம் பாட
பாய்ந்து வரும் நல ஆறுகளின் ஊடே
பண்பை அமைந்தது  பக்தாத்

வெள்ளை நிற கொள்ளையர்களால்
வெறிகொண்டு எரிக்கப்பட்டு
விடாமல் எரிந்து கொண்டிருக்கிறது
விலை நிலங்கள் எல்லாம் கொலைக்களங்கள்

இந்தியாவிலே தோண்ட தோண்ட நீர் வரும்
ஈராக்கிலே வந்தது என்னவோ எண்ணெய்
தோண்டிய இடத்தில் எல்லாம் எண்ணெய்
எண்ணெய் ஒன்றும் ஒற்றையாக வரவில்லை

உலக நாடுகளின் ஒற்றர்களை
எல்லையே இல்லா தொல்லை துயரங்களை
தோள்களிலே சுமந்தேதான் வந்தது
துன்பத்தின் தூதுவர்களாக எண்ணெய் தரகர்கள்

கழுதைகள் முதுகிலே பொதி ஏற்றி
கால் வயிறும் அரை வயிறும் நிரப்பியவர்கள்
கணக்கேயின்றி எண்ணெய் கிணறு
கண்டுபிடிக்கப்பட்டு விட்டது

விற்பனை செய்ய வேண்டும்
விளையும் தெரியாது விற்கவும் தெரியாது
எண்ணெய் வியாபாரம் அல்லவா சற்று
வழுக்கத்தான் செய்தது அரபுக்களை

ஓடோடி வந்தார்கள் வெள்ளை நிறத்தவர்கள்
விற்பனைதானே செய்தால் போயிற்று என்றார்கள்
பொருள் உங்களது பூமி உங்களது
பூமிக்கு அடியில் சுரப்பது எங்களது

என்னருமை அரபுக்களே உங்களுக்கு
ஏறிச் செல்ல வாகனங்கள் தருகிறோம்
பாலைவனம் எங்கும் சாலை வசதி
பொன் பொருள் வீடு தருகிறோம்

இனி உங்கள் கழுதைகளுக்கு ஓய்வு
பாக்தத்திர்க்கும் மாற்றீத்க்கும் செல்வதற்கு
ஒட்டகப் பயணம் தேவையில்லை
உயர்தரமான சொகுசு கார்களில் செல்லுங்கள்

ஓய்வெடுங்கள் வருவதை எல்லாம்
உங்கள் பெயரில் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்
சில நூற்றாண்டு கால ஒப்பந்தம் மட்டும் போதும்
நோட்டும் பேனாவும் கையிலே கொண்டு வந்துள்ளோம்

கையெழுத்துப் போட்டார்கள் அரபுக்கள்
கையெழுத்து வாங்கியவர்கள் அதை
கையால் எழுதியவர்கள் யாரும் அதில்
வையகத்தில் இன்று இல்லை ஆனால்
கை சேதப்பட்டு நிற்கிறது இன்றைய ஈராக்
கொத்து கொத்தாக கொல்லப்படுகிறார்கள்
கதறி கதறி துடிக்கிறது தேசம்
காலம் கடந்து போய்விட்டது

ஒப்பந்தம் இட்ட எண்ணெய் நாடுகள்
ஒற்றுமையாக அமைதி காக்கிறது
ஒப்பாரி வைக்க கூட அனுமதியில்லை
ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்க்கிறது

கனவு மெய்ப்பட முடியுமா
கோழிகள் எல்லாம் ஒட்டுமொத்தமாக
கூண்டில் அடைக்கப்பட்டுவிட்டது
காவல் காரனுக்கு பசி எடுத்தது

கோழி கூட்டம் ஒன்றை வெளியேற்றி
கூறு போட்டு காவு வாங்கி
களைப்பையும் பசியையும் ஆற்றி கொண்டான்
கூட்டத்தில் கூவி கூப்பாடு போட்ட

ஆண்வர்க்க சேவல் ஒன்று
அரவமே இல்லாமல் அறுக்கப்பட்டது
தூக்கு மேடையிலே கூட
துயரம் அடையவில்லை அந்த வீர உள்ளம்

இறைவம் மிகப் பெரியவன்
ஈராக் நீடூழி வாழட்டும்
இந்த மக்களால் நான் நினைக்கப்படுவேன்
இதுதான் ஈராக் அதிபரின் இறுதி கூற்று

என்ன காரணம் இதற்கெல்லாம்?
எண்ணைதான் காரணம்
சவடால் பேசி சென்ற இராணுவம்
சவப்பெட்டிகளில் திரும்பி கொண்டிருக்கிறது

என்ன இருக்கிறது ஈராக்கிலே?
உலக மகா பயங்கர உயிர் கொல்லி
ஆயுதங்களை ஒளித்து வைத்திருக்கிறார்
அவற்றை தேடி அழிக்கப் போகிறோம்

பாலைவன மண்ணை கூட விடாமல்
பக்குவமாய் சலித்து பார்த்தாகிவிட்டது
பால் கிடைக்காத குழந்தைகள்
பாராசிட்டாமல் கிடைக்காத நோயாளிகள்

இவற்றை தவிர ஒன்றும் கிடைக்கவில்லை
எண்ணெய் விட்ற காசு முடக்கப்பட்டுவிட்டது
என்னதான் செய்யும் அந்த தேசம்
இருளால் சூழப்பட்டு இருட்டடிக்கப்பட்டுவிட்டது

இறுதியாக குண்டுகள் மழையாகப்
பெய்விக்கப்பட்டு சூழ்ச்சியால்
அனைத்தும் மறைக்கவும் பட்டது
இராணுவத்தின் மீதான தாக்குதல்

என்று சமாதானங்கள் கூறப்பட்டது
ஏழு வயதை கூட தொடாத பைந்தளிர்கள்
கொத்து கொத்தாக கொளுத்தப் பட்டார்கள்
குழந்தைகளும் தாய்மார்களும் கூட விடுபடவில்லை

ஆயிரங்கள் இலட்ச்சங்கள் கோடிகளாகி
ஆயுள் ரேகைகள் எல்லாம்
ஆயில் திருடர்களால் அழிக்கப்படுகிறது
ஆயுதமும் போராட்டமும் ஓயவில்லை

ஈராக்கிய குழந்தைகளுக்கு அங்கே
பிறக்க மட்டும்தான் உரிமை போலும்
இறப்பை எயவிக்க இயந்திர துப்பாக்கிகள்
எந்நேரமும் தயார் நிலையில்

வெனிசூலா எனும் தேசம் நினைவிருக்கிறதா?
அவர்களை அழித்ததும் எண்ணெய் தோசம்தான்
எண்ணெய் பேரல்களை எல்லாம்
இடைத்தரகர்களிடம் கடனுக்கு விற்று விட்டு

நிலுவைத் தொகையை வராக்கடனில்
நியமித்து விட்டு வாயடைத்து நின்றனர்
நாட்டின் பொருளாதார நிலை
நடுக்கடலில் எண்ணெய் கப்பல் போல் மூழ்கியது

குவைத்திலும் எண்ணெய் உள்ளது
குடுமி அவர்களிடம் இல்லை
வழுக்கி கொண்டு போய்
வெள்ளையர்கள் கரங்களில் வீழ்ந்துவிட்டது

சூடானின் எண்ணெயை சீனா கொதிக்கிறது
லிபியாவின் எண்ணெய் பிரான்சு வசம்
சவூதி நிலை இன்னும் கவலைக்கிடம்
விளக்கெண்ணை விலையை கூட
வாஷிங்க்டன் தான் முடிவு செய்கிறது

எண்ணெய் நாடுகளை ஆளும் தலைவர்கள்
எல்லோரும் தலைகளில் முள் கிரீடம்
அணியப்பட்டேதான் ஆட்சி செய்கிறார்கள்
ஏற்றுக்கொண்டால் அரசும் ஆட்சியும்
இல்லையென்றால் கொலை வழக்கு தூக்கு மேடை

என்றாவது உலகம் விடியும் என்று
வானம் பார்த்து விடியல் நோக்குவோம்
பொருளால் உலகம் விடியும்
வாழ்நாள் மீதம் இருந்தால் நாமும் பார்ப்போம்

முதுவை சல்மான்
ரியாத், சவூதி

Leave a Reply