ஆப்பிள் டோநட் பணியாரம்

ஆப்பிள் பழம், பழச்சாறு, மாவுச் சேர்த்து கறுவாப்பொடி கலந்த சீனியில் பொரித்து எடுக்கும் இனிப்புகள் சுவையான ஆப்பிள் ஃபிரிட்டேர்ஸ் அல்லது ஆப்பிள் டோநட் பலகாரம் ஆகும்.

இதை நாமும் செய்து சுவைத்துப் பார்க்கலாம்

தேவையானவை:

1 கோப்பை தோல் அகற்றி மிகச் சிறிதாக நறுக்கி எடுத்த ஆப்பிள்கள்

½ கோப்பை ஆப்பிள் சாறு (apple cider)

1 மேசைக்கரண்டி சீனி குழைத்துக் கொள்ள –

மேலும் 1 கரண்டி தூவிக் கொள்ள

½ மேசை கரண்டி பொடியாக்கப்பட்ட கறுவாப்பட்டைத் தூள்

மேலும் ½ கறுவாப் பொடி தூவிக் கொள்ள

1 கோப்பை கோதுமை மா

1 முட்டை

⅛ சாதிக்காய் (Nutmeg) அரிந்த தூள்

⅛ கரண்டி சிறிதாகச் சீவப்பட்ட இஞ்சி

½ கரண்டி புளிக்க வைக்கும் மா (baking powder)

2 மேசைக்கரண்டி உருகிய வெண்ணெய் (melted butter)

பொரித்து எடுக்க சமையல் எண்ணெய்

தேவையான அளவு உப்பு

செய்முறை

ஒரு கரண்டி சீனி, மற்றும் அரைக் கரண்டி கறுவாப்பட்டை பொடியைக் கலந்து ஒரு உலர்ந்த பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்.

இவற்றுடன் ஆப்பிள் துண்டுகள், மேலே கூறப்பட்ட திரவியங்கள், முட்டை, சீனி, கோதுமை மா யாவற்றையும்  குழைத்துப் பதமாக – வடை செய்வது போன்ற பதத்திற்குத் தட்டி எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து வாணலியில் எண்ணெய் கொதிக்க வைத்துப் பொன்னிறமாகும் வரை டோநட் பலகாரத்தைப் பொரித்து எடுத்துக் கொள்ளவும். சூடாறும் முன்னர் – ஏற்கனவே ஒதுக்கி வைத்த கறுவாக் சீனிப் பொடியைத் தூவி நறுமண ஆப்பிள் டோநட் பலகாரத்தைப் பரிமாறிக் சுவைக்கலாம்,

தொகுப்பு – யோகி

Tags: 

Leave a Reply