ஆனைக்கார் ஓரியண்டல் (அரபிக்) மேல்நிலைப்பள்ளி, ஆம்பூர் – 635802

ஆனைக்கார் ஓரியண்டல் (அரபிக்) மேல்நிலைப்பள்ளி,

ஆம்பூர் – 635802

மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பு

 

எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே !

அல்லாஹ்வின் பேரருளால் சமுதாய மாணவர்களுக்கு உலகக் கல்வியை தரத்துடன் கொடுப்பதோடு, மார்க்க கல்வியையும் ஒரு சேர வழங்க சீரிய, நேரிய மார்க்க அறிஞர்கள் மற்றும் திறமையும் தகுதியும் வாய்ந்த ஆசிரியர்களின் நேரடி மேற்பார்வையில் கடந்த 1966 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டிலுள்ள வேலூர் மாவட்டம் ஆம்பூர் நகரில் ஆனைக்கார் ஓரியண்டல் (அரபிக்) மேல்நிலைப்பள்ளி சிறப்பாக இயங்கி வருகிறது.

உடலுக்கும், உள்ளத்திற்கும் உவகை தரக்கூடிய இயற்கையான சூழ்நிலையில், படிப்பதற்கு இடையூறு ஏற்படாத வகையில் ஊருக்கு சற்று வெளியே இப்பள்ளி அமையப்பெற்றுள்ளது. தரமான உணவுடன் கூடிய விடுதி (ஹாஸ்டல்) வசதியும் ஒருங்கே அமையப் பெற்றுள்ளது. இப்பள்ளியில் 6 முதல் 9 –ம் வகுப்பு வரையிலும் மற்றும் 11-ம் வகுப்பிலும் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். மேற்காணும் வகுப்புகளில் தங்களின் பிள்ளைகளை சேர்த்து ஈருலக வாழ்க்கையிலும் நிரந்தர நற்பயனை பெற்றோர்கள் ஏற்படுத்திக் கொள்ளலாம்.

எமது பள்ளியின் சிறப்பு அம்சங்கள் :

ஒழுக்கத்துடன் கூடிய மார்க்க கல்வி போதனை மற்றும் செயலாக்கப் பயிற்சிகள் > தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தின்படி மற்ற பள்ளிகளைப் போல சமச்சீர் கல்வி முறை > அனைத்து மாணவர்களுக்கும் தஜ்வீதுடன் குர்ஆன் போதனை > தொடர்ச்சியாக பலமுறை 100% தேர்ச்சி விகிதம் > மாணவர்களின் பொது அறிவை வளர்க்க பெரிய நூலகம் > மாணவர்களின் தனித்திறனை வளர்க்க N.S.S மற்றும்      N.C.C. பயிற்சி > முழு சுகாதாரத்துடன் கூடிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்> அனைத்து வகுப்பறைகளிலும் மின் விளக்கு மற்றும் மின் விசிறி வசதி> முழுவதும் குளிரூட்டப்பட்ட (A/C கணினி ஆய்வகம் > 6 முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் கணினி சிறப்பு பயிற்சி > பரந்த விளையாட்டு மைதானம் > விடுதி மாணவர்களுக்கு ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு சிறப்பு உடற்பயிற்சி > படிப்பில் பின் தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் > 6 முதல் 10-ம் வகுப்பு வரை, தமிழ், உருது மற்றும் ஆங்கில வழிகளில் வகுப்புகள் > 11 மற்றும் 12 ம் வகுப்பு ஆங்கில வழியில் மட்டும்

Group 1 கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல். Group 2 கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல். Group 3 இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல். Group 4 வணிகவியல், கணக்குப்பதிவியல், பொருளியல், கணினி அறிவியல்.  Group 5 வணிகவியல், பொருளியல், மேலாண்மையியல், கணக்குப்பதிவியல்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 475 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற வெளியூர் மாணவர்களுக்கு இலவச விடுதி வசதி. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 400 முதல் 450 மதிப்பெண்கள் பெறும் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிக்கட்டணத்தில் 25% முதல் 50% வரை சலுகை. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு 11 மற்றும் 12 ம் வகுப்புகளில் இலவசக் கல்வி.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் நேரில் அணுகவும். மேலும் தகவல் அறிய 04174 – 242834/ 9360743304/9790377655 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Tags: ,

Leave a Reply