ஆதார் அட்டை பதிவுக்கு 11 மையங்கள்

ராமநாதபுரம், : விடுபட்டவர்கள் ஆதார் அட்டைக்கு பதிவு செய்ய ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து கலெக்டர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை: அனைவருக்கும் ஆதார் அடையாள அட்டை வழங்கும் விதமாக, கைரேகை மற்றும் கருவிழி படலங்களைப் பதிவு செய்யும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. வரும் மார்ச் 2015க்கு முன்பு 100 சதவீதம் ஆதார் அட்டை களை வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 

அதன்படி தாலுகா அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் நிலையான மையங்கள் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 80 சதவீத மக்களுக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. எஞ்சியவர்களுக்கு வழங்க மாவட்டத்தில் 11 இடங்களில் நிலையான மையங்கள் அமைக்கப்பட்டு, கைரேகை மற்றும் கருவிழி படலங்கள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இதன்படி, ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம், கீழக்கரை நகராட்சி அலுவலகங்கள், ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், திருவாடானை, கடலாடி, ராமேஸ்வரம் ஆகிய தாலுகா அலுவலகங்களில் ஆதார் அட்டைக்கான மையங்கள் செயல்பட்டு வருகிறது. எனவே இதுநாள் வரை கைரேகை மற்றும் கருவிழிப் படலங்களை பதிவு செய்யாத அனைவரும் மேற்படி மையங்களுக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது விடுபட்டவர்களுக்கும் இந்த மையங்களிலேயே அதற்கான படிவங்கள் விரைவில் வழங்கப்படும். படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து கொடுத்து, கைரேகை மற்றும் கருவிழிப் படலங்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply