ஆட்டுவிக்கும் புள்ளிகள்

ஆட்டுவிக்கும் புள்ளிகள்
கடுகளவே ஆக்ரமிக்கும்
கோலங்கள் பல தோற்றுவிக்கும்!
ஆரம்ப புள்ளியென்று
அனைத்திற்கும் ஆதாரமுண்டு!
சிறு தீப் பொறி புள்ளியும்
பெறு வெளிச்ச கோலமாகும்!
“வலி”யெனும் புள்ளியில்
“வழி” கோலம் பிறக்கும்!
“புரட்சி” யெனும் புள்ளியில்
“புதுப்” பாதை தளம் காணும்!
“முயற்சி” யெனும் புள்ளியில்
” முன்னேற்றம் கைச் சேரும்!
“கருணை” யெனும் புள்ளியில்
“மனிதம்” மிஞ்சி வாழும்!
ஆள்காட்டி விரலில்
நாம் பெறும் புள்ளி!
ஆட்சியமைக்கும்
அது பெரும் புள்ளி!
கோலங்களை ஆக்கும் புள்ளி
கோலங்களில் அடங்கும்!
வட்டப்பாதையில் எப்புள்ளிக்கும்
ஆரம்- மையப் புள்ளியினூடே..
வாழ்க்கைப் பாதையில் எப்புள்ளிக்கும்
ஆதாரம் – அன்பினூடே!!!
– நர்கிஸ் ஜியா
அஜ்மான்

Leave a Reply