அல் அய்ன் தமிழ் குடும்பம் நடத்திய நகைச்சுவை பட்டிமன்றம்

a5அல் அய்ன் தமிழ் குடும்பம் நடத்திய  நகைச்சுவை பட்டிமன்றம் : பேராசிரியர் முனைவர் பீ.மு. மன்சூர் நடுவராக பங்கேற்பு
அல் அய்ன் : ஐக்கிய அரபு  அமீரகத்தின் பசுமை நகராக இருந்து வரும் அல் அய்ன் தமிழ் குடும்பம்  வாழ்க்கை வசந்தமாய் இனிப்பது திருமணத்துக்கு முன் ? பின் ? என்ற தலைப்பில் பட்டிமன்றம் ஒன்றை  இந்திய சமூக மைய உள்ளரங்கத்தில் நடத்தியது.
இந்த பட்டிமன்றத்தின் நடுவராக  முனைவர் பேராசிரியர் பீ.மு.மன்சூர், முன்னாள் துணை முதல்வர், ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சி அவர்கள் கலந்து கொண்டார். அவர் நகைச்சுவை உணர்வுடன் பட்டிமன்றத்தை கொண்டு சென்ற விதம் அல் அய்ன் நகரில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களை மிகவும் கவர்ந்தது. நீண்ட நாட்களுக்கு பின்னர் தமிழின் சுவையை மிகவும் இனிமையாக ரசித்ததாக பொதுமக்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.
அதன் பின்னர் சிறப்பு விருந்தினர் பீ.மு.மன்சூர் அவர்கள் பொன்னாடை அணிவித்தும் நினைவுப் பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த விழாவில் தமிழர்கள் அனைவரும் பாரம்பர்ய உடையான வேட்டி, சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.
Tags: , ,

Leave a Reply