அறிவோம் நம்மை ஆள்பவர்களை!

அறிவோம் நம்மை ஆள்பவர்களை!
================================

2011 தேர்தல் கமிஷனில் கொடுத்துள்ள விவரங்களின் படி 5 கிரிமினல் வழக்குகளுக்கு மேலாக தன்னகத்தை பெருமையாய் வைத்திருக்கும் ச.ம.உக்கள்

1 ) 36 வழக்குகள்
திரு. தனியரசு / பரமத்தி – கரூர் / அதிமுக

2 ) 17 வழக்குகள்
திரு. தங்க தமிழ்செல்வன் / ஆண்டிப்பட்டி / அதிமுக

3 ) 13 வழக்குகள்
திரு. அனிதா ராதாகிருஷ்ணன் / திருச்செந்தூர் / திமுக

4 ) 10 வழக்குகள்
திரு. ஆர். காமராஜ் / நன்னிலம் / அதிமுக

5 ) 9 வழக்குகள்
திரு. ஜெ. குருநாதன் / ஜெயங்கொண்டம் / பாமக

6 ) 9 வழக்குகள்
செல்வி ஜெ. ஜெயலலிதா / ஸ்ரீரங்கம் / அதிமுக – (சொத்துக்குவிப்பு வழக்கில் பதவி விலகி, பின்னாளில் தீர்ப்பு வந்து ஆர்.கே நகர் போனார்)

7 ) 8 வழக்குகள்
திரு. செந்தில் பாலாஜி / கரூர் / அதிமுக

9 ) 8 வழக்குகள்
திரு. ஆர். குமரகுரு / உளுந்தூர்பேட்டை / அதிமுக

10 ) 6 வழக்குகள்
திரு. சி. வி. சண்முகம் / விழுப்புரம் / அதிமுக

ஆக டாப் 10-ல் அதிமுக – 8; திமுக -1; பாமக -1; தமிழகத்தின் மூன்று பெரிய கட்சிகளிலும் கிரிமினல் வழக்குகளோடு போட்டியிட்டு வென்றவர்கள் இவர்கள் தான். இவர்களின் மீதான வழக்கு அந்தந்த தொகுதிவாசிகளுக்கு தெரிந்ததா இல்லையா என்பதை விட இவர்களை தான் நாம் வாக்களித்து தேர்ந்தெடுத்து இருக்கிறோம் என்பது தான் முக்கியம். காரணம், நம்மை ஆள வாக்கு கேட்டு வருபவர்கள் பற்றிய தெளிவான பார்வை நம்மிடையே இல்லாதது. இதை இந்த தேர்தலில் மாற்ற முயற்சிப்போம்.

யாராவது ‘ரமணா’ மாதிரி வந்து இப்படி ஒவ்வொரு இடமாய் லிஸ்ட் எடுத்து பகிரங்கமாய் போட்டாலேயொழிய நம்மை ஆளப் போவர்கள் நம்மை சாணியை மிதிப்பதுப் போல மிதித்துவிட்டு போய்விடுவார்கள்.

இந்த 2016 தேர்தலில் அது நடக்கவிடாமல் பார்க்கவேண்டியதும், பரப்புரை செய்ய வேண்டியதும் நம்முடைய கடமை.

#‎SayNotoCriminalCandidates‬

Tags: 

Leave a Reply