அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய சில வழிமுறைகள்

 

1.பள்ளிக்கு அனைத்து வேலை நாட்களிலும் வருகை தரல் வேண்டும்

2. வகுப்பறையில் பாடங்களைக் கூர்ந்து கவனித்தல் வேண்டும்

3. ஒவ்வொரு நாளும் நடத்தப்படும் பாடங்களை அன்றே படித்து மனதில் பதித்துக் கொள்ள வேண்டும்.

4. பாடங்களில் ஏற்படும் ஐயப்பாடுகளை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களிடம் கேட்டுத் தெளிவுப் படுத்துக்கொள்ள வேண்டும்.

5. பாடங்களைப் படிக்கும்போது ஒவ்வொரு பத்தியிலும் உள்ள முக்கியக் கருத்துக்களை ( Key Points ) மனதில் இருத்திக்கொள்ள வேண்டும். இக்கருத்துக்களைச் சிறு குறிப்புகளாக நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக் கொள்ளலாம். இது தேர்வு நேரங்களில் திருப்புதலுக்கு  ( Revision ) மிகவும் உபயோகமாக இருக்கும்.

6. தேர்வுக்கு முன்பாகப் படிக்கவேண்டிய பாடங்களைக் கால அட்டவணை தயார் செய்து திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். திட்டமிட்டபடி அப்பாடத்தைக் காலம் தவறாமல் படிக்க வேண்டும்.

7. பள்ளியில் நடைபெறும் எந்த ஒரு தேர்வையும் ( Including Unit Test )      தவிர்க்கக் கூடாது.

8. வகுப்பறைத் தேர்வில் விடை தெரியாத வினாக்களுக்கு அன்றைய தினமே விடைகளைப் படித்து அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

9. ஒவ்வொரு நாளும் குறைந்த பட்சம் ஐந்து மணி நேரமாவது படிக்க வேண்டும்.

 

குறிப்பு :

( நடு இரவில் கண்விழித்து படித்தல் கூடாது. ஏனெனில் உடலும் மூளையும் அச்சமயம் சோர்வடைந்து இருக்கும். இதனால் படித்த பாடங்களும் மனதில் தங்காது. மேலும், அடுத்த நாள் பள்ளி நேரத்தில் பாடங்களைக் கவனிக்க உடலும் மூளையும் ஒத்துழைக்காது )

10. படிப்பில் பின் தங்கிய மாணவர்கள் அனைத்துப் பாடங்களையும் முழுமையாகப் படிக்க இயலாவிட்டாலும் குறு வினாக்களை ஒன்று விடாமல் அனைத்துப் பாடங்களிலும் தவறாது படிக்க வேண்டும்.

11. படித்த பாடங்களை மறக்காமல் இருப்பதற்கு எழுத்துப்பயிற்சி மிக அவசியம். கணிதப்பாடத்தை முழுமையாகச் செய்து பார்த்தல் வேண்டும். அறிவியல் பாடங்கலில் சமன்பாடுகள் ( Equations and derivation) மற்றும் படங்கள் ( Diagram ) சமூக அறிவியல் வரைபடம் போன்றவற்றிற்கு எழுத்துப் பயிற்சி மிக அவசியம்.

12. கற்றல் முழுமை அடைய வேண்டும் என்றால் படித்த பாடம் மனதில் முழுமையாகத் தங்க வேண்டும். இதற்குப் பாடங்களைப் படித்தல், எழுதிப் பார்த்தல் மட்டும் போதாது. கற்ற கருத்துக்களை மீண்டும், மீண்டும் நினைவுக்கு கொண்டு வர வேண்டும் ( Recollect the point )

13. அரசுத் தேர்வினை எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் பள்ளியில் நடைபெறும் காலண்டுத் தேர்வினைப்போல் எண்ணி எழுத வேண்டும். குறிப்பாகப் பாடப்புத்தங்களை மட்டுமே படிப்பதன் மூலம் அனைத்து வகையான வினாக்களுக்கும் பதிலளிக்க இயலும்.

14. பொதுத் தேர்வின்போது இரவு நேரங்களில் அதிக நேரம் கண் விழித்துப் படித்தல் கூடாது.

15. தேர்வு மையத்தியத்திற்கு ஒரு மணிநேரம் முன்னதாக வந்து சேர வேண்டும்.

16. தேர்வு அறைக்குச் செல்லுமுன் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். படித்த பாடங்களை நினைவு கூர வேண்டும். சக தோழர்களுடன் ( Friends ) தேவையற்ற கருத்து பரிமாற்றம் தவிர்க்கப்பட வேண்டும்.

17. தேர்வு அறையில் வினாத்தாள் பெற்றவுடன் ஒவ்வொரு வினாவினையும் நன்கு முழுமையாகப் படித்து அதன் பொருளினை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

18. முதலில் நன்கு விடை தெரிந்த வினாக்களைத் தேர்வு செய்து விடை எழுதுதல்

19. வினாக்களின் எண்களைத் தவறு இன்றிக் குறிப்பிட வேண்டும்.

20. முக்கியக் கருத்துக்களை எழுதும்போது பேனாவினால் அடிக்கோடிட்டு எழுதினால் அதிக மதிப்பெண்கள் பெற வாய்ப்புண்டு.

21. விடைகள் அடித்தல், திருத்தல் இன்றி கையெழுத்துத் தெளிவாக புரியும்படி எழுதுதல் வேண்டும்.

22. விடைத்தாளில் குறிப்பிட்ட வினாவிற்குப் பின்னர் விடை எழுதலாம் என்று எண்ணி விடைத்தாளின் நடுவே காலியாக இடம் விடக்கூடாது.

23. குறிப்பிட்ட நேரத்திற்குள் அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும்.

24. விடைகளின் நடுவே தேவையெனில் படங்கள் ( Diagram & graph )           வரைய வேண்டும்.

25. தேர்வு நேரம் முடிய பத்து நிமிடங்களுக்கு முன்பாகவே அனைத்து வினாக்களுக்கும் விடையெழுதி முடித்துவிட வேண்டும்.

26. இறுதியாக வினாக்களின் எண்கள் சரியாக உள்ளதா என்றும் அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கப்பட்டுள்ளதா என்றும் சரிபார்த்தல் வேண்டும்.

27. மிகவும் வறுமை மற்றும் இதரப் பிரச்சினைகளுக்குரிய பெற்றோர்களை உடைய மாணவர்கள் மற்றும் மோசமான குடும்பச் சூழல் உள்ள மாணவர்கள் அச்சூழலை மறந்து படிப்பதில் கவனம் செலுத்துதல் வேண்டும். அத்தகைய இடர்பாடுகளை வெற்றி கொள்ள அமைந்த ஒரு நல்ல வாய்ப்பாக பொதுத்தேர்வினை நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் எதிர்நோக்க வேண்டும்.

 

Tags: , ,

Leave a Reply