அரசு கல்லூரியில் எழுச்சி தின விழா

முதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூயில் அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர்களின் எழுச்சி தின விழா  வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

 நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கே.செல்லத்துரை தலைமை வகித்தார். அதிமுக ஒன்றிய செயலாளர் கருப்புச்சாமி, மாவட்ட கவுன்சிலர் சதன்பிரபாகர், நகரச் செயலாளர் சி.தமிழ்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிமுக மாவட்ட செயலாளர் ஆர். தர்மர் சிறப்புரை ஆற்றினார். கல்லூரியின் என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் உ.சண்முகநாதன் வரவேற்றார். அரசு மேல்நிலைப்பள்ளி என்.சி.சி திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.துரைப்பாண்டியன், பேராசிரியர் சுரேஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

Tags: , , ,

Leave a Reply