அய்மான் சங்க புதிய துணைப் பொருளாளர்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்
அய்மான்  நமது நிர்வாகக்குழுவின் அவசரக் கூட்டம்  பொதுச் செயலாளர் SAC ஹமீது அவர்களின் இல்லத்தில் வைத்து இனிதே நடந்தேறியது்.
கூட்டத்தின் போது நமது முன்னாள் தலைவர்கள் அல்ஹாஜ் காதர் பக்‌ஷ் ஹுசைன் சித்தீக்கி, அல்ஹாஜ் ஷம்சுத்தீன், அல்ஹாஜ்
செய்யது ஜாஃபர் ஆகியோரது ஆலோசனைகளும் பெறப்பட்டது.
முக்கியமாக வரும் ரமலான் மாதத்தின் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும்
நமது பொருளாளர் கீழை ஜமாலுத்தீன் அவர்களுடன் சேர்ந்து மேலும் சிறப்பாக பணியாற்றும் பொருட்டு துணைப் பொருளாளர்களாக
சகோதரர்கள் லால்பேட்டை முஹம்மது அப்பாஸ், கொள்ளுமேடு முஹம்மது ஹாரிஸ், மற்றும் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதிர் ஆகியோர் கூட்டாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
சமுதாய சேவையில் இறைவனருளால் 35 வருடங்களை தொட்ட அய்மான் சங்கம் மென்மேலும் உற்சாகத்தோடும், முழுபலத்தோடும் தொய்வின்றி மக்கள் பணியை தொடரும் என்று உறுதி கூறப்பட்டது..
மேலும் எல்லா மக்களோடும் இணக்கத்துடனும் சகோதர வாஞ்சையோடும் செயல்படும் அதே வேளை அய்மான் தனது
தனித்தன்மையையும் எல்லா நிலைகளிலும் தொடர்ந்து கட்டிக் காக்கும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

 

Tags: , ,

Leave a Reply