அம்மா உணவகம்

அம்மா உணவகத்தில் இட்டிலி 1 ரூபாய், தயிர் சாதம் 3 ரூபாய், சாம்பார் சாதம் 5 ரூபாய்.

இதன் உற்பத்தி செலவு:

இட்டிலி 1: 3.64 ரூபாய்
தயிர் சாதம்: 7.74 ரூபாய்
சாம்பார் சாதம்: 14.73 ரூபாய்

அம்மா உணவக வாடிக்கையாளர்களில் 88% ஆண்கள்
58% பேர் மாதம் ஐயாயிரம் முதல் பத்தாயிரம் வரை சம்பாதிப்பவர்கள்
35% வாரம் ஒன்றுக்கு 4 முதல் 6 தடவை இங்கே வருபவர்கள்

அம்மா உணவக பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ. 300 ஊதியம் வழங்கபடுகிறது

இதுவரை 294 அம்மா உணவகங்கள் தமிழகமெங்கும் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை 654 ஆக உயர்த்தபடும். அதன்பின் ஆயிரமாக இவற்றின் எண்ணிக்கை உயரும். ஆயிரம் உணவகங்களுக்கும் இழப்பு 150 கோடி ஆகலாம் என எதிர்பார்க்கபடுகிறது. நகராட்சி,பஞ்சாயத்துகளுக்கு தமிழக அரசு ஒதுக்கும் நிதி 4700 கோடி என்பதால் இது பெரிய சுமை அல்ல என அரசுவட்டாரங்களில் கூறப்படுகிறது. ஆயிரம் உணவகங்களாக எண்ணிக்கை உயர்ந்தால் நாள் ஒன்றுக்கு 8 முதல் 10 லட்சம் பேர் இங்கே உண்பார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.12,000 பணியாளர்கள் பணியாற்றுவார்கள்.

ஒப்பீட்டுக்கு

ஓட்டல் சரவணபவன்

கிளைகள் 82
விற்பனை 45 கோடி
பணியாளர்கள் 8700

மொத்தத்தில் 2016 தேர்தலில் அம்மாவின் பிர்ம்மாஸ்திரமாக அம்மா உணவகம் இருக்கும். எம்.ஜி.ஆருக்கு சத்துணவு திட்டம் பெயர் பெற்றுகொடுத்தது போல் அம்மா அம்மா உணவகத்தால் தன் பெயரை நிலைநாட்டுவதற்கான அறிகுறிகள் பிரகாசகமாக உள்ளன.

செல்வன்

https://www.facebook.com/groups/tamilhealth/  (ஆரோக்கியம் & நல்வாழ்வு)
http://holyox.blogspot.com (பொதுவான என் தமிழ் வலைபதிவு)

 

— 

Tags: ,

Leave a Reply