அமைதி மற்றும் மனித நேய பரப்புரை

நம் இந்தியத் திருநாடு பன்மைச் சமூக நாடு. இந்நாட்டின் மிகப்பெரிய பலம் வலுவான அதன் சமூக அமைப்புதான். பல இன, மொழி, மத, கலாசார மரபினர் பல நூற்றாண்டுகளாக ஒழுங்கினைந்து வாழும் இந்தியா உலகிற்கே முன்மாதிரியாக திகழ்கிறது.

 

அண்மைக்காலமாக இந்த பன்மைச் சமூகக்கூருகளுக்கு பெரும் சவால்கள் எழுந்துள்ளன. இன ரீதியாக இந்த நாட்டைக் கூருபோடுவதர்க்காக தீயசக்திகள் பெரும் முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுக்கின்றனர். இனவாரியாக இந்த தேசத்தைக் கூறுபோடுவதன் மூலம் தங்கள் அரசியல் அதிகாரத்தை நிலைப்படுத்திக்கொள்ள முடியும் என வகுப்புவாத இனவாத தீயசக்திகள் உறுதியாக நம்பிச் செயல்படுகின்றனர். இதனால் நாடு முழுவதும் ஓரு வகையான பதற்ற நிலை தொடர்ந்து நீடிப்பதற்கு அவர்கள் முயற்சிக்கின்றனர்.

 

இந்நிலையில், இந்தியத் திருநாட்டின் ஒருமைப்பாடு மற்றும் அதன் தனித்துவத்தின் சின்னமாக விளங்கும் சமூக நல்லிணக்கம் மற்றும் நாட்டின் அமைதி நிலவவேண்டும் என்ற நோக்கத்துடன் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்திய அளவில் “அமைதி மற்றும் மனித நேய பரப்புரை” இயக்கத்தினை வரும் ஆகஸ்ட் 24, 2016 முதல் செப்டம்பர் 4, 2016 வரை மேற்கொள்ளவுள்ளது.

 

இப்பரப்புரை இயக்கத்தில் நாட்டின் சிறப்புகளான சமூக ஒருமைப்பாடு, நல்லிணக்கம், புரிந்துணர்வு ஆகியவற்றை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டுவருகிறது.

 

இப்பரப்புரை இயக்கத்தின் ஒரு பகுதியாக “அமைதி மற்றும் மனிதநேயம்” எனும் தலைப்பில் கருத்தரங்கம் ஆகஸ்ட் 26, 2016 (வெள்ளிக்கிழமை) மாலை 7 மணியளவில், கோவை அரசு கலைக்கல்லூரிக்கு அருகிலுள்ள ஹோட்டல் பார்க் பிளாஸாவில் சிறப்பாக நடைபெற்றது.

 

இந்நிகழ்வில் இந்த பரப்புரையின் நோக்கம் மற்றும் அவசியம் குறித்தும், எவ்வாறு எல்லா மதங்களை சார்ந்த மக்களும் நல்லிணக்கத்துடன் வாழ நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைபெற செய்வதன் மூலமே மக்களிடையே அமைதியை பரவிட செய்யமுடியும் எனும் கருத்தில் சிறப்புரை நிகழ்த்தினார் பேராசிரியர் ஏஜாஸ் அஹமது அஸ்லம் (ஆசிரியர், Radiance Views Weeekly Magazine)அவர்கள்.

 

அதனைத் தொடர்ந்து சமூக அமைதி மற்றும் நல்லிணக்கம் பேண மக்கள் எவ்விதமான செயபாடுகளை முன்னெடுக்க வேண்டும் என பல்வேறு சமூக சிந்தனையாளர்கள், தலைவர்கள், மற்றும் சான்றோர்கள் பங்குகொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சியில் பங்குகொண்ட விருந்தினர்களில்,

–    சுவாமிஜி லலிதானந்த (USA )– Lotus Temple.

–    திரு. O.A. பாலசுப்ரமணியன் – மேலாண்மை இயக்குனர், Roots Industries.

–    திரு. பேரூர் ஜெயராமன் – சிறுதுளி

–    திரு. சாக்ரடீஸ் – சமூக விழிப்புணர்வு இயக்கம்.

–    திரு மார்கண்டன் – முன்னால் துணைவேந்தர், காந்தி கிராமம்.

–    திருமதி. சங்கர கோபால் – முதல்வர், இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி.

–    திரு. கோபால் அய்யா – Peace Park Foundation.

–    அருட்தந்தை பீட்டர் – டான் பாஸ்கோ அன்பு இல்லம்.

–    திரு. ஜர்னல் சிங் & திரு. இக்பால் சிங் – சீக்கிய குருத்வாரா.

–    திரு. A.R. பாஷீருல்லா – தலைவர், அத்தார் ஜமாஅத், கோவை

–    திரு விஜய ராகவன் – ஒருங்கிணைப்பாளர், சாந்தி ஆஷ்ரம்.

–    வழக்கறிஞர். திரு. பாலமுருகன் – தலைவர், PUCL

–    வழக்கறிஞர். திரு. பன்னீர்செல்வம் – செயலாளர், சமூக நீதிக் கட்சி.

–    ஆடிட்டர் ஆசிப் – I-Step

–    அருட்தந்தை. ரூபன் – செயலாளர், Harvest India Foundation.

–    வழக்கறிஞர். திரு. கார்க்கி

–    வழக்கறிஞர். திரு. ஆனந்தன் – உறுப்பினர், இந்திய வழக்கறிஞர்கள் சங்கம். ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

 

பெரும்பான்மையான நல்லவர்கள் சமூக செயல்பாட்டிலிருந்து விலகி இருப்பதும் அநீதி மற்றும் தீயவற்றைக் கண்டு அமைதிகாப்பதும் தான், சமூகத்தில் நிலவும் தீமைகளுக்கும் பல்வேறு இழப்புகளுக்கும் சமூகத்தை இட்டுச்செல்லுகிறது, எனவே நல்லவர்கள் ஒன்றிணைந்து சமூகத்தில் இருக்கும் தீமைகளை களைய ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்பதே இந்நிகழ்ச்சியில் பங்குகொண்டவர்களின் ஒட்டுமொத்த கருத்தாக ஒலித்தது.

 

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் கோவை மாநகர கிளையின் தலைவர், K.A. சையது இப்ராஹிம் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். இந்நிகழ்வினை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் P.S. உமர் ஃபாரூக் ஒருங்கிணைத்தார் கோவை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மக்கள் தொடர்பு செயலாளர் அப்துல் ஹக்கீம், ஊடகப் பிரிவு செயலாளர் முஹம்மது அனீஸ் மற்றும் பலர் பங்குகொண்டனர்.

 

இந்நிகழ்ச்சி குறித்த செய்தியினையும், இப்பரப்புரையின் நோக்கம் மற்றும் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு தங்களது மேலான பத்திரிகையின் வாயிலாக இந்த செய்தி மக்கள் மன்றத்தை சென்றடையச் செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

 

தகவல் :

 

முஹம்மது அனீஸ்

ஊடகச் செயலாளர்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், கோவை

Ph: 90479-42277

Ph: 0422-2260418

E–mail: jihkovai@gmail.com

Tags: ,

Leave a Reply