அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் சார்பில் இஃப்தார்

69அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் சார்பில் ”மாபெறும் இஃப்தார் விழா”

அன்புடையீர்அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.)

அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் வல்ல ரஹ்மானின் அளப்பெறிய கருணையினால் அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் சார்பில் 17.07.2014  வியாழன் மாலை – வெள்ளி இரவு (06:30 – 09:00),இந்தியன் இஸ்லாமிக் சென்டரின் பெரு அரங்கில் வெகு சீரோடும், சிறப்போடும் மாபெரும் இப்தார்விருந்தையும், அதனை தொடர்ந்து சிறப்பு நிகழ்ச்சிகளையும் பெரு விழாவாக நடத்தியது.அல்ஹம்துலில்லாஹ்!. எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!.

 

இந்த சிறப்பு ஒன்று கூடல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக காயிதே மில்லத் பேரவையின் சர்வதேசஒருங்கிணைப்பாளர் அல்ஹாஜ் M. அப்துல் ரஹ்மான் Ex. M.P., லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல்அன்வாரின் பேராசிரியர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் J. ஜாகீர் ஹூஸைன் ஹஜ்ரத், நோபல்மரைன் குரூப்பின் அதிபரும் – சமுதாய புரவலருமான அல்ஹாஜ் ஷாஹூல் ஹமீது, பனியாஸ்பில்டிங் மெட்டீரியல்ஸ் குரூப்பின் அதிபரும் – சமுதாய புரவலருமான ஹமீது ஹாஜியார், இந்தியன்இஸ்லாமிக் சென்டரின் பிரசிடென்ட் பாவா ஹாஜி, அய்மான் தலைவர் அல்ஹாஜ் ஷாஹூல் ஹமீதுமற்றும் நிர்வாகிகள், ஐ. எம்.எஃப் தலைவர்  அல்ஹாஜ் அப்துல் காதர் மற்றும் நிர்வாகிகள், அமீரககாயிதே மில்லத் பேரவை நிர்வாகிகள் ஆவை முஹம்மது அன்சாரி மற்றும் ஹமீதுர்ரஹ்மான்,மௌலிது கமிட்டி நிர்வாகிகள், அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் அணைத்துஉறுப்பினர்கள், துபாய் லால்பேட்டை ஜமாஅத்தின் நிர்வாகிகள், மற்றும் இதர சகோதர ஜமா“அத்அமைப்பின் சகோதர, சகோதரிகள் திரளாக வந்திருந்து கலந்து கொண்டனர்.

 

இந்த சிறப்பு விழா ஜமாஅத்தின் தலைவர் ஜனாப் M. ஷூஐபுதீன் அவர்கள் தலைமையில்நடைபெற்றது. இறைமறை வசனத்தை ஹாபிஜ் இர்ஷாத் அஹமது ஓத, வரவேற்புறையைபொதுச்செயலாளர்  S.A. ரஃபி அஹமது வழங்க, துவக்க உறையை மௌலானா மௌலவி ஹூஸைன்மக்கீ ஆலிம் மஹ்லரி நிகழ்த்த, ஜமாஅத்தின் சேவைப்பயணத்தின் அறிக்கையை பொருளாளர் A.H. நஜீர்அஹமது வாசிக்க,

ஸதக்காவின் சிறப்பு மற்றும் அதன் பயன் குறித்து சிறப்பு பயானை மௌலானா மௌலவி அல்ஹாஜ்J. ஜாகீர் ஹூஸைன் ஹஜ்ரத் நிகழ்த்த, ஜமாஅத்தின் துவக்கம், குறிக்கோள், செயல்பாடுகள் மற்றும்ஒற்றுமை குறித்து ஜனாப் M. ஷூஐபுதீன் அவர்கள் தலைமை உறையாற்ற,  சமுதாய புரவலர்அல்ஹாஜ் ஷாஹூல் ஹமீது அவர்கள் வாழ்த்துரையாற்ற, நம் சமுதாய ஒற்றுமை, உறவுகளில்ஒற்றுமை, லால்பேட்டையின் மான்புகள் குறித்து காயிதே மில்லத் பேரவையின் சர்வதேசஒருங்கிணைப்பாளர் அல்ஹாஜ் M. அப்துல் ரஹ்மான் Ex. M.P. அவர்கள்சிறப்புறையாற்ற, அழைப்பினை ஏற்று வருகை புரிந்திருந்த அணைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும்ஜமாஅத்தின் முன்னாள் மற்றும் இன்னாள் பொருப்பாளர்களால் பொன்னாடை போர்த்திகௌரவிக்கப்பட்டது.

 

இறுதியாக நன்றி உறையினை துணைப் பொருளாளர் A.S. அப்துல் ரஹ்மான் ரப்பானி வழங்க,துஆவினை மௌலானா மௌலவி அல்ஹாஜ் J. ஜாகீர் ஹூஸைன் ஹஜ்ரத் அவர்கள் ஓத, நிகழ்ச்சிகள்யாவும் இனிதே நிறைவுற்றது.

 

Tags: , , ,

Leave a Reply