அபுதாபி இஃப்தார் நிகழ்வில் சமுதாய இயக்கங்களுக்கு அய்மான் சங்கத்தின் ஒரு வரி கோரிக்கை!

ai7

அபுதாபி ஜூலை 26-
ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் செயல்பட்டு வரும் அய்மான் சங்கம் சார்பில் முப்பெரும் நிகழ்வுகள் நடைபெற்றது.
அய்மான் மக்கள் மன்றம்,பத்ர் நினைவு தினம்,மற்றும் இஃப்தார் ஆகிய முப்பெரும் நிகழ்வுகள் அபுதாபி செட்டிநாடு உணவாக அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீது தலைமை வகித்தார்.
திருச்சி அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் களமருதூர் ஷம்சுத்தீன் ஹாஜியார் முன்னிலை வகித்தார்.
அய்மான் சங்க பொதுச் செயலாளர் காயல் எஸ்.ஏ.சி.ஹமீது வரவேற்று பேசினார்.
தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த திருமலர் மீரான் சிறப்பு கவிதை வாசித்தார்.
புனித மிக்க ரமலான் மாதத்தில் நிகழ்ந்த பத்ர் போரின் நிகழ்வுகளையும்,அதன் மூலம் பெற வேண்டிய படிப்பினைகள் குறித்தும் அய்மான் சங்கத்தின் மார்க்கத்துறை செயலாளர் மெளலவி ஹாபிள் ஹுஸைன் மக்கி ஆலிம் மஹ்ளரி விரிவான உரை நிகழ்த்தினார்.
 ai91
மக்கள் மன்றம் 
இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி முடிந்தவுடன் சமுதாய இயக்கங்களுக்கு அய்மான் சங்கத்தின் ஒரு வரி கோரிக்கை “ஒன்றுபடுங்கள் நன்று பெறுங்கள்”  என்ற தலைப்பில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
எதிர்வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் சமுதாய அமைப்பினர் ஒரே த்தொகுதியில் போட்டியிடும் சூழலை தவிர்க்க கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.
துவக்கமாக திருச்சி அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலாளர் கீழக்கரை சைய்யது ஜாஃபர் கல்லூரியின் செயல்பாடுகள் குறித்தும் சமுதாயம் அய்மான் கல்லூரிக்கு நல்க வேண்டிய ஒத்துழைப்பு குறித்தும் விளக்கி உரை நிகழ்த்தினார்.
அதிரை கவியன்பன் கலாம் அவர்கள் கவிதை வாசித்ததை தொடர்ந்து சமுதாய இயக்கங்களின் சார்பில் பிரதிநிதிகள் தங்களின் கருத்தை பதிவு செய்தனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அமீரக காயிதேமில்லத் பேரவையின் அமைப்புச் செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்,
மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் மண்டலச் செயலாளர் திருச்சி அப்துல் ரஹ்மான்
எஸ்.டி.பி.ஐ.சார்பில் அபுதாபி செயலாளர் உடன்குடி முஹைதீன் ஆகியோர் தங்களின் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
அமீரக காயிதேமில்லத் பேரவையின் துபாய் மண்டலச் செயலாளர் முதுவை ஹிதாயத் வாழ்த்துரை வழங்கினார்.
 ai5
நிர்வாகிகள் பதவியேற்பு
அய்மான் சங்கத்தின் துணைத் தலைவராக திருவாடுதுறை எ.அன்சாரி பாஷா அவர்களும், அய்மான் சங்கத்தின் மக்கள் தொடர்பு செயலாளராக காயல்பட்டினம் முஹம்மது அன்சாரி அவர்களும் பதவி பிரமாணம் ஏற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் பனியாஸ் நிறுவன அதிபர் அப்துல் ஹமீத் மரைக்காயர்,அமீரக காயிதேமில்லத் பேரவை மக்கள் தொடர்புச் செயலாளர் ஆவை.ஏ.எஸ்.முஹம்மது அன்சாரி,பாரதி  நட்புக்காக அமைப்பின்  சார்பில் அதன் செயலாளர்  கலீல்

மற்றும்  அதிரை  காதற்  மொகிதீன்
துபாய் காயிதே மில்லத்  பேரவை  சார்பாக  முதுவை  ஹிதாயத்
மற்றும் காயல்பட்டினம்,அதிராம்பட்டினம்,கீழக்கரை, லால்பேட்டை,நாகூர்,உள்ளிட்ட ஊர் ஜமாஅத்

நிர்வாகிகள் பெரியபட்டினம்  பைத்துல் மால்  தலைவர்  ஜஹாங்கீர்,சமுதாய அமைப்புக்களின் பிரதிநிதிகள்,அய்மான் சங்கம் மற்றும் கல்லூரியின் பிரமுகர்கள்,பல்வேறு ஊர்களின் ஜமாஅத் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை அபுதாபி அய்மான் சங்க நிர்வாகிகளான லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்,களமருதூர் ஷர்புத்தீன்,ஏர்வாடி அப்துல் சத்தார்
ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
 ai3
அய்மான் சங்க பொருளாளர் கீழை ஹெச்.எம்.எம்.ஜமாலுத்தீன் நன்றி கூற மெளலவி ஹபீபுர் ரஹ்மான் ஆலிம் அவர்களின் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
Tags: , ,

Leave a Reply