அபுதாபி அய்மான் சங்க நிகழ்ச்சி

hijri new year 2015 (2)அபுதாபியில் நாளை  05.11.2015 வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு ருச்சி உணவகத்தில் அபுதாபி அய்மான் சங்கம், இந்திய முஸ்லிம் பேரவை, அபுதாபி லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் மற்றும் மௌலிது கமிட்டி ஆகியவை இணைந்து ஹிஜ்ரி 1437 இஸ்லாமியப் புத்தாண்டு சிறப்பு நிகழ்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் முனைவர் பேராசிரியர் சேமுமு முகமதலி சிறப்புரை நிகழ்த்துகிறார். சொற்பொழிவுக்குப் பின்னர் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட தேர்வுகள் குறித்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெறும்.
 இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முனைவர் பேராசிரியர் சேமுமு முகமதலி சிறந்த தமிழறிஞருக்கான தமிழக அரசின் உமறுப்புலவர் விருது பெற்றவர்.  முன்னாள் கல்லூரி முதல்வர்.
 இவர் தற்போது சென்னையில் தமிழக மாணவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அரசின் உயர் பதவிகளில் சேர வேண்டும் என்ற ஆவலில் செயல்பட்டு வரும் எஸ்-ஐஏஎஸ் அகாடமியின் செயல் இயக்குநராகவும் இருந்து வருகிறார்.
மேலும் விபரங்களுக்கு 050 782 4129 /  050 62 12569  ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்
Tags: , ,

Leave a Reply