அபுதாபி அய்மான் சங்கம் நடத்தும் இஸ்லாமிய புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி

அபுதாபி அய்மான் சங்கம் நடத்தும்
இஸ்லாமிய புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி
அபுதாபி :
அபுதாபி அய்மான் சங்கத்தில் இன்று வியாழக்கிழமை இஸ்லாமிய புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அய்மான் சங்க பொதுச்செயலாளர் காயல் எஸ்.ஏ.சி. ஹமீது தெரிவித்ததாவது : அய்மான் சங்கத்தின் சார்பில் இன்று வியாழக்கிழமை மாலை 7.30 மணிக்கு இஸ்லாமிய புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சி இந்தியன் இஸ்லாமிக் சென்டர் அரங்கில் நடக்க இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் மவுலவி செய்யது முஹம்மது பாஷா ரஷாதி மற்றும் மவுலவி என். உபைதுர் ரஹ்மான் மிஸ்பாஹி ஆகியோர் சிறப்புச் சொற்பொழிவு வழங்குகின்றனர்.
படைத்த இறைவனுக்காக பிறந்த தேசம், தாய், தந்தையர், மனைவி, மக்கள் அனைத்தையும் துறந்து உலக வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரும் தியாகப் பயணம் ஹிஜ்ரத் ஆகும். இது குறித்து மார்க்க அறிஞர்கள் சிறப்புரை வழங்குவர்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags: , ,

Leave a Reply