அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் இஸ்லாமிய புத்தாண்டு நிகழ்ச்சி.!

                  இஸ்லாமிய ஆண்டான ஹிஜ்ரி புத்தாண்டின் சிறப்பு நிகழ்ச்சி அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் 25/11/2011 வெள்ளிக் கிழமை மாலை 8 மணிக்கு அபுதாபி நஜ்தா ரோட்டில் உள்ள ஈடிஏ சமூக நலக் கூடத்தில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு அய்மான் சங்கத்தலைவர் அதிரை.ஏ.ஷாஹுல் ஹமீத தலைமை வகித்தார்.அய்மான் கல்லூரியின் தலைவர் களமருதூர் ஷம்சுத்தீன் ஹாஜியார்,அய்மான் துணைத்தலைவர் ஹாஜி குத்புத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 அய்மான் சங்க மார்க்கத் துறை செயலாளர் மெளலவி ஷர்புத்தீன் மன்பஈ இறைமறை வசனங்கள் ஓதி துவக்க்கி வைத்தார்.
செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் வரவேற்றுப் பேசினார்.
அய்மான் சங்க பொதுச் செயலாளர் காயல் எஸ்.ஏ.சி.ஹமீது,ஹாஜி.அப்துல் வஹ்ஹாப்,ஹாஜி அல்லாபிச்சை உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதுரை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் மெளலவி பி.கே.என்.அப்துல் காதிர் ஆலிம் ஹிஜ்ரி ஆண்டின் சிறப்பைப் பற்றியும் முஹர்ரம் மாதத்தின் சிறப்பைப் பற்றியும் விளக்கி உரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்ச்சியில் அய்மான் கல்லூரியின் செயலாளர் கீழை செய்யது ஜாஃபர்,அய்மான் சங்கத்தின் பொருளாளர் ஜமாலுத்தீன் பெரியப்பட்டிணம் ஜஹாங்கீர்,உள்ளிட்ட பல்வேறு ஊர் ஜமாஅத்தின் பிரமுகர்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.
 அய்மான் சங்க செயலாளர் எரவாஞ்சேரி முஹம்மது இக்பால் நன்றி கூற, பனியாஸ் அப்துல் ஹமீது மரைக்காயரின் துஆவுடன் கூட்டம் நிறைவடைந்தது.
Tags: , ,

Leave a Reply