அபுதாபியில் லால்பேட்டை ஜ‌மாஅத் 19 வ‌து பொதுக்குழு கூட்ட‌ம்

05042013022 (1)அபுதாபி : ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் வசிக்கும் லால்பேட்டை மக்களின் ஒன்றிணைந்த ஜமாஅத்தாக விளங்கும் அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் 19 வது பொதுக் குழு கூட்டம் அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் செண்டரில் வெள்ளிக் கிழமை மாலை 5.30 மணிக்கு துவங்கியது.

அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் தலைவர் மெளலவி ஏ.அமீனுல் ஹுஸைன் தலைமை வகித்தார்.

ஜமாஅத்தின் மூத்த தலைவர் ஹாஜி டி.ஏ.முஹம்மது ஹஸன்,துணைத் தலைவர் எம்.ஜாஃபர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துவக்கமாக மெளலவி முஜ்ஜம்மில் மன்பஈ கிராஅத் ஓதினார்.

ஜமாஅத் பொதுச் செயலாளர் ஏ.யாசிர் அரஃபாத் அலி அனைவரையும் வரவேற்று ஆண்டரிக்கையை தாக்கல் செய்தார்.

ஜமாஅத் பொருளாளர் முஹம்மது இலியாஸ் வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தார்.

தணிக்கையாளர் அப்துல் மாலிக் தணிக்கை அறிக்கைய தாக்கல் செய்தார்.

செயற்குழு உறுப்பினர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ஜமாத்தின் செயல்பாடுள் தொய்வின்றி நடைபெற அனைவர்களது ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்தி கருத்துரை வழங்கினார்.

தொடர்ந்து அடுத்த இரண்டு ( 2013-2014) ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைப்பெற்றது. புதிய நிர்வாகிகள் தேர்வை முன்னாள் தலைவர்கள் முஹம்மது ஹஸன்,மெளலவி அமீனுல் ஹுஸைன் ஆகியோர் முன்னின்று நடத்தினர்.

கீழ்கண்ட நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர் : எம்.ஷுஹைபுத்தீன்
துணைத் தலைவர்கள் : பி.ஹெச்.முஹம்மது ஆதம்
ஹாஜி எஸ்.ஏ.முஹம்மது தைய்யூப்,ஏ.ஆர்.இஸ்மத்துல்லாஹ்

பொதுச் செயலாளர் : எம்.அக்பர் அலி

பொருளாளர்: ஏ.ஹெச். நஜீர் அஹமது
துணைப் பொருளாளர்: ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்

அபுதாபி செயலாளர்கள்:
எம்.அப்துல் ஹாதி
என்.ஏ.சிராஜுத்தீன்
எம்.ஜாஃபர் அலி
எஸ்.ஏ.ரஃபி அஹமத்
முஸ்ஸப்பாஹ் செயலாளர்: சாதிக் பாஷா
அல் அய்ன் செயலாளர்: ஓ.பி.ஜெ. நூருல் அமீன்

தணிக்கையாளர் : ஜெ.ஃபத்தஹுல்லாஹ்

பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1, மறைந்த அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் ஸ்தாபக உறுப்பினரும்,ஜமாஅத்தின் முன்னாள் தலைவருமான ஹாஜி எம்.ஏ.முஹம்மது ஹஸன் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அவரின் மஃக்பிரத்திற்காக இக்கூட்டம் துஆ செய்கிறது.

2, ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் 150 வது ஆண்டு விழா மலருக்கு ஒரு பக்கம் ஜமாஅத் சார்பில் விளம்பரம் கொடுக்க இக்கூட்டம் ஒப்புதல் அளிக்கிறது.

3, அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் 20வது ஆண்டை முன்னிட்டு அடுத்த வருடத்தில் சிறப்பு மலர் ஒன்றை வெளியிடவும் இப்பொதுக் குழு அங்கீகாரம் வழங்குகிறது.

4, நமதூர் ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் 150 வது ஆண்டு விழா சிறப்புற நடைபெற வாழ்த்துவதோடு, நமதூர் மதரஸவின் பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டுகோள் வைப்பது மற்றும் ஊரில் மார்க்கப் பணியாற்றும் ஆலிம்களின் ஊதியம் உயர்த்தி வழங்கப்பட ஆவண செய்ய வேண்டி வலியுறுத்துவது என தீர்மானிக்கிறது.

இறுதியாக மறைந்த முன்னாள் தலைவர் ஹாஜி எம்.ஏ.முஹம்மது ஹஸன் பாய் அவர்களுக்காக யாசின் ஓதி துஆ செய்யப்பட்டது.

பொதுச் செயலாளர் எம்.அக்பர் அலி நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது.

புதிய நிர்வாகிகளுக்கு முதுகுளத்தூர்.காம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

 

Tags: , ,

Leave a Reply