அபுதாபியில் மாத்துல் பஞ்சாயத்து கே.எம்.சி.சி துவக்கம்

அபுதாபியில் மாத்துல் பஞ்சாயத்து கே.எம்.சி.சி துவக்கம்-அபுதுல் ரஹ்மான் எம்பி.-அப்துல் ரஹ்மான் ரண்டதானி எம்.எல்.ஏ பங்கேற்பு

அபுதாபியில் மாத்துல் பஞ்சாயத்து கே.எம்.சி.சி துவக்கம்‍ வேலூர் எம்.பி. அப்துல் ரஹ்மான் -அப்துல் ரஹ்மான் ரண்டதானி எம்.எல்.ஏ பங்கேற்பு

அபுதாபி : கேரள மாநிலம் மாத்துல் பஞ்சாயத்து கே.எம்.சி.சி. சார்பில் புதிய கிளை துவக்க விழா 16.06.2012 ச‌னிக்கிழ‌மை மாலை அபுதாபி இந்திய‌ன் இஸ்லாமிக் சென்ட‌ரில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் எம்.பி.கேரள மாநில சட்ட மன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் ரண்டதானி எம்.எல்….ஏ. ஆகியோர் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்ச்சிக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு கே.எம்.சி.சி.,அமீரக காயிதெமில்லத் பேரவை,அய்மான் சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்ப்பளிக்கப்பட்டது.

தொடர்ந்து இந்தியன் இஸ்லாமிக் செண்டர் ஆடிட்டோரியத்தில் நிகழ்ச்சி எழுச்சியுடன் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் உரையை கேட்க திரளான மக்கள் கூடியிருந்தனர்.

அப்துல் ரஹ்மான் எம்.பி.தனது உரையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு கேரள மாநிலம் ஆற்றி வரும் மகத்தான சேவைகளையும்,அதன் தலைவர்களையும் பெருமையோடு நினைவு கூர்ந்தார்.கேரள மாநில முஸ்லிம் லீகின் ஆதரவினால் இந்தியா முழுவதற்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு ஏணிச் சின்னம் கிடைத்ததை சுட்டி காட்டிய போது அரங்கமே கை தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்க்கிணங்க தமிழிலும் சில நிமிடங்கள் பேசி தனது உரையை முடித்தார்.

சட்டமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் ரண்டதானி பேசும் போது தமிழ் நாடு முஸ்லிம் லீகின் பெருமையையும், நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் அவர்களின் அரசியல் அணுகுமுறை,அவரின் அறிவாற்றல் மிக்க பேச்சுத் திறனையும் சிலாகித்துப் பேசினார்.தொடர்ந்து கேரள அரசியல் நிலவரங்களையும்,கே.எம்.சி.சி.யின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கமாக மளையாளத்தில் உரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு அமீரக காயிதேமில்லத் பேரவையின் பொதுச் செயலாள‌ர் திருப்பனந்தாள் முஹம்மது தாஹா,பொருளாளர் கீழக்கரை எஸ்.கே.எஸ்.ஹமீதுர் ரஹ்மான்,அமைப்புச் செயளாலர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்,ஊடகத்துறைச் செயலாள‌ர் கும்பகோணம் சாதிக் ஆகியோர் சால்வை அணிவித்து கவுரவித்தனர்.

நிகழ்ச்சியில் அமீரக காயிதெமில்லத் பேரவையின் துபை மண்டலச் செயளாலர் முதுவை ஹிதாயத், கொள்கை பரப்புச் செயலாளர் கடையநல்லூர் ஹபீபுல்லாஹ்,மக்கள் தொடர்பு செயலாளர் கீழை ஏ.ஹமீது யாஸின்,ஃபுஜைரா மண்டலச் செயலாள‌ர் வழுத்தூர் ஜெ.முஹையத்தீன் பாட்ஷா, ஜமாஅத் ஒருங்கிணைப்புச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹ்யத்தீன்,ஆடிட்டர் கீழக்கரை ஹமீத் பக்‌ஷ் யூசுப்,தேவிபட்டிணம் நிஜாம் அக்பர்,அபுதாபி அய்மான் சங்க பொதுச் செயளாலர் காயல் எஸ்.ஏ.சி.ஹமீது, துணைத் தலைவர் ஹாஜி குத்துபுதீன், பொருளாளர் கீழை ஜமால்,செயலாள‌ர் திருவாடுதுறை அன்சாரி பாஷா,முத்துப்பேட்டை முஹைதீன் சாஹிப் உள்ளிட்ட நிர்வாகிகளும்,சமுதாய ஆர்வலர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தி மளையாளிகளின் மனதை கொள்ளை கொண்டதாக கேரள மக்கள் பெருமையோடு பேசிக் கொண்டு கலைந்து சென்றதை காண முடிந்தது.

More Photos :
http://www.facebook.com/media/set/?set=a.4106573661822.176477.1207444085&type=1&l=7418c14cd5

Leave a Reply