அபுதாபியில் பிறைமேடை இதழ் அறிமுக நிகழ்ச்சி

அபுதாபி : அபுதாபியில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் பிறைமேடை மாதமிருமுறை இதழ் அறிமுக நிகழ்ச்சி மற்றும் முதுவை பிரமுகர் ஆர். பக்கீர் முஹம்மதுவுக்கு 24.09.2010 வெள்ளிக்கிழமை மாலை கிங்ஸ்கேட் ஹோட்டலில் நடைபெற்றது.

நிகழ்விற்கு அபுதாபி பகுதி பொறுப்பாளர் ஏ.எஸ். பாட்சா தலைமை வகித்தார். சுல்தான் சையது வரவேற்புரை நிகழ்த்தினார்.

பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத் பிறைமேடை மாதமிருமுறை இதழ் குறித்த அறிமுகம் செய்து வைத்தார். பிறைமேடை இதழ் வேலூர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்டு வருகிறது.

பிறைமேடை இதழை சுல்தான் சையது வெளியி்ட முதுகுளத்தூர் ஒன்றியப் பெருந்தலைவராக இருந்த மர்ஹும் ராஜா முஹம்மது அவர்களது மகன் ஆர். பக்கீர் முஹம்மது பெற்றுக் கொண்டார்.

ஏற்புரை நிகழ்த்திய பக்கீர் முஹம்மது அவர்கள் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்வுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அமீரகத்தில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் அங்கத்தினர்கள் சிறப்பாக செயல்பட்டு தாயகத்தில் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளுக்கு உதவி வருவதற்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் முதுகுளத்தூர்.காம் மூலம் உலகளாவிய வகையில் வாழ்ந்து வரும் நமதூர் மக்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருவது மகிழ்வினையளிக்கிறது என்றார். மேலும் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் அமீரக நிர்வாகிகள் மேற்கொண்டு வரும் அனைத்து முயற்சிகளுக்கும் தன்னால் இயன்ற ஒத்துழைப்புகளை நல்குவதாக தெரிவித்தார்.

நிகழ்வில் அன்சாரி, ஜலீல், நைனா முஹம்மது, அப்பாஸ், அஜ்மீர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மேலும் புகைப்படங்களுக்கு :

http://www.facebook.com/album.php?aid=34575&id=1207444085&l=750abcdbb0

Tags: , , ,

Leave a Reply