அபுதாபியில் காயிதேமில்லத் ஆவணப்படம் வெளியீடு

முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை வெளியீட்டில் ஆளூர் ஷாநவாஸ் இயக்கத்தில் உருவான கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்களின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்பட வெளியீட்டு விழா, 04-12-2014 அன்று அபுதாபியில் நடைபெற்றது.

காயிதேமில்லத் பேரவை உறுப்பினர் லால்பேட்டை சல்மான் நிகழ்ச்சியின் தலைமையை முன்மொழிய பேரவையின் செயலாளர் வழுத்தூர் முஹையத்தீன் பாட்ஷா வழிமொழிந்தார்.நிகழ்ச்சிக்கு அமீரக காயிதேமில்லத் பேரவை தலைவர் குத்தாலம் லியாகத் அலி தலைமை தாங்கினார். அபுதாபி அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஷாஹீல் ஹமீத், அமீரக காயிதேமில்லத் பேரவை துணைத் தலைவர் களமருதூர் ஷம்சுத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதிரை தவ்சீஃப் ரஹ்மதுல்லாஹ் இறைமறை வசனங்களை ஓதினார்.அமீரக காயிதேமில்லத் பேரவை அமைப்புச் செயலாளர் லால்பேட்டை A.S.அப்துர்ரஹ்மான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.பேரவையின் பொதுச்செயலாளர் முஹம்மது தாஹா வரவேற்புரையாற்ற, பேரவையின் பொருளாளர் ஹமீதுர்ரஹ்மான் அறிமுக உரை நிகழ்த்தினார்.

அபுதாபி நோபல் குழும நிர்வாக இயக்குனர் சமுதாயப் புரவலர் ஷாஹீல் ஹமீத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர் ஆடுதுறை A.M.ஷாஜஹான், மாநில துணைச் செயலாளர் மில்லத் S.B.முஹம்மது இஸ்மாயில், மாநில உடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜமால் முஹம்மது இப்ராஹிம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ST கூரியர் நிர்வாக இயக்குனர் நவாஸ் கனி கருத்துரை வழங்க, ஆவணப்பட இயக்குநர்ஆளூர் ஷாநவாஸ் சிறப்புரையாற்றினார். காயிதேமில்லத் பேரவையின் சர்வதேச ஒருங்கிணைப்பாளரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் உறுப்பினருமான M.அப்துல் ரஹ்மான் நிறைவுரையாற்றினார்.

கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படத்தின் குறுந்தகடை முன்னாள் எம்.பி அப்துல் ரஹ்மான் வெளியிட, அதன் முதல் பிரதியை ஷாகுல் ஹமீத், நவாஸ் கனி ஆகியோரும், இரண்டாம் பிரதியை அய்மான் சங்கத்தின் சையது ஜாஃபர், மூன்றாம் பிரதியை அய்யம்பேட்டை வாலன் ஜெய்லான் பாட்ஷா ஆகியோரும் பெற்றுக்கொண்டனர்.

இறுதியில், காயிதேமில்லத் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம் திரையிடப்பட்டது.

அய்மான் சங்கப் பொதுச்செயலாளர் காயல் SAC ஹமீத் நன்றியுரை நிகழ்த்த, நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

இந் நிகழ்ச்சியில் அமீரகத்தில் உள்ள தமிழ் மக்கள் திரளாக பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமீரக காயிதேமில்லத் பேரவையும்அபுதாபி அய்மான் சங்கமும் செய்திருந்தது.

நன்றி: தினகரன்
http://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=680&Cat=27

Tags: , , ,

Leave a Reply