அபுதாபியில் அமீன் தகப்பனாருக்கு வரவேற்பு நிகழ்ச்சி

IMG-20141105-WA0008அபுதாபியில் அமீன் தகப்பனாருக்கு வரவேற்பு நிகழ்ச்சி

அபுதாபி : அபுதாபியில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் பொறியாளர் அமீனுதீன் மற்றும் பொறியாளர் நஸ்ருதீன் ஆகியோரது தகப்பனாரும், ஷாம் பர்னிச்சர்ஸ் அதிபருமான அல்ஹாஜ் சாகுல் ஹமீது அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி 05.11.2014 செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

அல்ஹாஜ் சாகுல் ஹமீதுக்கு விழாக்குழு பொறுப்பாளர் சாதிக் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

நிகழ்வில் ஜமாஅத் நிர்வாகிகள் ஹெச். ஹசன் அஹம்து, ஏ ஜஹாங்கீர், அஹமது இம்தாதுல்லா, ஹபிப் திவான், நூரி,  தமீம், அஸ்லம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அமீரகம் வருகை புரிந்துள்ள அல்ஹாஜ் சாகுல் ஹமீது அவர்கள் உலகின் மிக உயரமான கட்டிடமான ஃபுர்ஜ் கலீஃபா,  மிகப்பெரிய பள்ளிவாசல் அபுதாபி ஷேக் ஸையித் பள்ளிவாசல் உள்ளிட்ட பல்வேறு இடங்களைப் பார்வையிட்டார்.

ஜனாப் சம்சுதீன் சேட் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

 

 

Leave a Reply