அன்பு செய்வோம் !

—- காரைக்குடி பாத்திமா ஹமீத், சார்ஜா  —-
இறந்து போன கல்லறையில்
உறங்கிக் கிடக்கும் மனிதர்கள் !
என்னகொண்டு வந்தார்கள் ?
எதையெடுத்துச் சென்றார்கள் ?
இறைவன் தந்த இனிய வாழ்வில்
ஏழைகளைக் கண்டால்
எகத்தாளம் ஏன் ?
பணக்காரனைக் கண்டால்
பணிவு ஏன் ?
போட்டியும் பொறாமையும் கொண்டு
இல்லார்க்கு உதவிட வேண்டும் !
சாதியிலும் மதத்திலும் கொண்டு
சண்டைகள் போடாதிருத்தல் வேண்டும் !
போதுமென்ற மனம் படைத்தவன்
பெரும் பணக்காரன்
கோடியிருந்தும் போதாதென்பவன்
படுபிச்சைக்காரன் !
சாந்தியும் சமாதானமும் கொண்டு
உயிரிகளிடத்தில் அன்பு செய்தல்
வேண்டும் !
நிலையான தர்மம் செய்து
நமக்காகத் துஆ செய்ய
பிள்ளைகள் பெற்று
நல் அமல்கள் இவை மூன்றும்
நம்முடன் வர, பிறவிப்பயனை
முடித்து விட்டு உறங்க வேண்டும்
நாமும் மண்ணறையில் மன நிம்மதியுடன் !

 

Tags: 

Leave a Reply