அன்புத் தோழி

நிறத்தைப் போலவே
மனமும் வெள்ளை என்றவளே!
அதைக் கருமையாக்கிவிட்டு
எங்கே சென்றாய்?

தேனினும் இனிமை
குரல் என்றவளே!
அதைக் கசப்பாக்கிவிட்டு
எங்கே சென்றாய்?

பாலினும் தூய்மை
குணம் என்றவளே!
அதைத் திரியவைத்துவிட்டு
எங்கே சென்றாய்?

கண்கள் கலங்கிய போதெல்லாம்
என்னைவிட உன்கைகள்
என்கண்களைத் துடைத்தனவே!
இன்றும் கலங்குகிறேன்
உன்கைகளுக்காக ஏங்குகிறேன்!

துவண்டபோதெல்லாம் தோள்கொடுத்துத் தூக்கியவளே!
இன்றும் துவளுகிறேன்
ஊன்றுகோலாய் நீ எங்கே?

இனியொரு பிறப்பு வேண்டும்!
இணைந்து கல்லூரிக்குச்
செல்லவேண்டும்!
கவலைகளின்றிச் சுற்றித்திரிய
வேண்டும்!
உன்தோளில் என்தலை
சாய்க்க வேண்டும்!

காரைக்குடி.பாத்திமா ஹமீத்
ஷார்ஜா

Tags: 

Leave a Reply