அஜ்மானில் நடந்த முப்பெரும் விழா

_DSC8006அஜ்மானில் நடந்த முப்பெரும் விழா

 

அஜ்மான் : அஜ்மானில் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் சார்பில் ஈகைத் திருநாள், இந்திய சுதந்திர தின விழா மற்றும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த நிகழ்ச்சி அஜ்மான் ரயான் ஓட்டலில் நடந்தது.

விழாவுக்கு அமீரகத் தமிழர்கள் அமைப்பின் செயலாளர் சபையர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். தலைவர் டாக்டர் ஏ.எஸ். மூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார். அப்போது அவர் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் சார்பில் அஜ்மான் பகுதியில் பாதிக்கப்பட்ட 23 மீனவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் பல்வேறு சமூக சேவைகள் இந்த அமைப்பின் மூலம் செய்யப்பட்டு வருகிறது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அஜ்மான் போலீஸ் அதிகாரி சைப் அப்துல்லா ராஷித் மத்ரூசி சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டார்.

முந்திரி பருப்பு உற்பத்தி முதல் அது சந்தைக்கு செல்லும் வரை செல்லக்கூடிய வகையில் மெஷின்களை கண்டுபிடித்த சென்னையைச் சேர்ந்த தமிழர்கள் பாரதி மற்றும் சாரதி ஆகியோருக்கு மலேசியா அரசு சமீபத்தில் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. அதனைப் பாராட்டி அவர்களுக்கு சாதனையாளர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஆடிட்டர் இளவரசன், புகைப்பட நிபுணர் மதுக்கூர் நூருல் அமீன், பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பலர் கௌரவிக்கப்பட்டனர்.

கோபு, நந்தகுமார், எஸ்.எஸ். மீரான் உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்தினர். முஸ்தாக் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். _DSC7863 (1)

Tags: ,

Leave a Reply