அஜ்மானில் சிறப்பாக பணிபுரிந்து வரும் மருத்துவர்களுக்கு பாராட்டு

10அஜ்மானில் சிறப்பாக பணிபுரிந்து வரும் மருத்துவர்களுக்கு பாராட்டு 
 
அஜ்மான் : அஜ்மானில் கல்ப் மருத்துவ கல்லூரி மருத்துவமனை சிறப்பான முறையில் இயங்கி வருகிறது. இங்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்ப மருத்துவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 
இந்த மருத்துவமனையில் சிறப்பாக பணிபுரிந்து வரும் மருத்துவர்கள் டாக்டார் பிரசாந்த் ஹெக்டே,டாக்டர் மொகனத் முகம்மது சுல்தான், டாக்டர் மஹ்மூத் பாரூக் முகம்மது எல்மாதி உள்ளிட்டோருக்கு கல்ப் மருத்துவ பல்கலைக்கழக  தலைவர்    தம்பே முகைதீன் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
இந்த விருதுகள் தங்களது இந்தப் பணியில் மென்மேலும் சிறப்பான வகையில் செயல்படுவதற்கு உறுதுணையாக இருக்கும் என அவர்கள் தெரிவித்தனர். 
தம்பே ஆஸ்பத்திரி துபாய், சார்ஜா, அஜ்மான், மற்றும் புஜேரா உள்ளிட்ட இடங்களில்  ஆஸ்பத்திரிகளை நிர்வகித்து வருகிறது. இங்கு 20 நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 50-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. அஜ்மானின் முதலாவது தனியார் மருத்துவமனை என்ற பெருமையையும் இந்த மருத்துவமனை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் அக்பர் முகைதீன் தம்பே உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 
 

 

Tags: , , ,

Leave a Reply