அஜ்மானில் கவிஞர் கருத்தானின் நூல் விரைவில் வெளியீடு

DSC_0008 (1) (1)அஜ்மானில் கவிஞர் கருத்தானின் நூல் விரைவில் வெளியீடு

அஜ்மான் : அஜ்மான் தமிழ்ப் பேரவையின் மாதாந்திர கூட்டம் 28.08.2014 வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
அமீரகத்தில் பணிபுரிந்து வரும் கவிஞர் கருத்தான் முஹம்மது ஹுசைன் அவர்களின் கவிதை நூல் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. இதற்காக தான் தொகுத்தளித்த கவிதைகளை புரவலர் ஹெச். ஹஸன் அஹமதுவிடம் வழங்கினார்.
கவிஞர் கருத்தான் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்தவர். குடும்ப சூழல் காரணமாக பள்ளி சென்று பயில வாய்ப்பு பெறாதவர். குடும்ப தொழிலான மாட்டு வண்டி ஓட்டி குடும்பத்திற்கு வருவாயை தேடிதந்தவர். இதன் காரணமாக எழுந்த தாக்கத்தின் காரணமாக கவித்திறன் பெற்றார். எனினும் படிக்கவோ எழுதவோ தெரியாதவர்.
எனினும் விடாமுயற்சி மற்றும் ஆர்வத்தின் காரணமாக கவிதை வடிக்கும் திறன் பெற்றார். நண்பர்களின் உதவியோடு எழுத்தாக்கமாக்கினார் தனது கவிதைகளை.
விரைவில் அவை நண்பர்களின் உதவியோடு தாயகத்திலும் அமீரகத்திலும் வெளியிட இருக்கிறார். இப்பணியில் உதவிட விரும்பும் நல்லுங்கள் 050 51 96 433 / mudukulathur.com@gmail.com எனும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.
அதனைத் தொடர்ந்து ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் முதலவர் மறைந்த பெரும்புலவர் சி. நயினார் முஹம்மதுவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வில் முதுவை ஹிதாயத், அஹமத் இம்தாதுல்லாஹ், கவிஞர் கருத்தான் முஹம்மது ஹுசைன், சையது இப்ராஹிம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Tags: , , ,

Leave a Reply