அஜ்மானில் கல்ப் மருத்துவ பல்கலைக்கழக 17-வது ஆண்டு விழா

4 (1)அஜ்மானில் கல்ப் மருத்துவ பல்கலைக்கழக 17-வது ஆண்டு விழா

அஜ்மான் : அஜ்மானில் கல்ப் மருத்துவ பல்கலைக்கழக 17-வது ஆண்டு விழா 05.11.2015 வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்ப் மருத்துவ பல்கலைக்கழகத்தின் நிறுவன தலைவர் தம்பே முகைதீன் தலைமை வகித்தார்.
கர்நாடக மாநிலத்தின் வனத்துறை அமைச்சர் பி. ராமநாத் ராய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் 17-வது ஆண்டை கொண்டாடுவதையொட்டி வைக்கப்பட்டிருந்த கேக்கை வெட்டினார்.
இந்த விழாவில் தட்சிண கன்னட மாவட்டத்தின் துணை கமிஷனர் ஏ.பி. இப்ராகிம் ,  கல்ப் மருத்துவ பல்கலைக்கழகத்தின் புரவோஸ்ட் பேராசிரியை கீதா அசோக், தம்பே குழுமத்தின் ஹெல்த்கேர் டிவிசனின் துணைத்தலைவர் அக்பர் முகைதீன் தம்பே உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

Tags: , ,

Leave a Reply