அஜ்மானில் இந்திய நிறுவனத்தின் சார்பில் புதிய மருத்துவமனை

IMG-20150901-WA0008அஜ்மானில் இந்திய நிறுவனத்தின் சார்பில் புதிய மருத்துவமனை IMG-20150901-WA0009 (1)

அஜ்மான் : அஜ்மானில் இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் தம்பே முகைதீன் குழுமத்தால் கல்ப் மருத்துவ பல்கலைக்கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த குழுமத்தின் சார்பில் மருத்துவ நிலையங்கள், பார்மஸி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
மருத்துவ பல்கலைக்கழகத்துக்கென பிரத்யேகமாக மருத்துவமனை ஒன்று கட்டப்பட இருக்கிறது. இந்த புதிய மருத்துவமனை கட்டும் திட்டத்துக்கு  அஜ்மான் ஆட்சியாளர் ஷேக் ஹுமைத் பின் ராஷித் அல் காசிமி பாராட்டு தெரிவித்தார். ஆட்சியாளரின் பாராட்டு தங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாக தம்பே முகைதீன் தெரிவித்தார்.
இந்த புதிய மருத்துவமனை 300 படுக்கைகள் கொண்டதாக இருக்கும். இந்த பணிகள் வரும் 2017 / 2018 ஆம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிறுவனத்தின் பிரதிநிதி அலுவலகங்கள் 20 நாடுகளில் அமைக்கப்படும். மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த இந்த நிறுவனத்தின் சார்பில் சிறப்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. IMG-20150901-WA0010

Leave a Reply