அஜ்மானில் அமீரக அவுலாத் அவுல்தார் அமைப்பின் ஈகைத் திருநாள் சந்திப்பு

DSC_0123 (1)அஜ்மானில் அமீரக அவுலாத் அவுல்தார் அமைப்பின் ஈகைத் திருநாள் சந்திப்பு

அஜ்மான் : அஜ்மானில் அமீரக அவுலாத் அவுல்தார் அமைப்பின் சார்பில் ஈகைத் திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி 28.07.2014 திங்கட்கிழமை நடைபெற்றது.
துவக்கமாக உமர் முக்தார் இறைவசனங்களை ஓதினார். அமீரக அவுலாத் அவுல்தார் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் ஹஸன அஹமத் தலைமை வகித்தார். அவுலாத் அவுல்தார் அமைப்பின் மூலம் செய்யப்பட்டு வரும் சமூக நலப் பணிகள் பற்றி விவரித்தார்.
பொதுச்செயலாளர் ஹெச் இப்னு சிக்கந்தர் வரவேற்புரை நிகழ்த்தினார். பள்ளிப்படிப்பு படிக்காவிட்டாலும், எழுதத் தெரியாவிட்டாலும் தனது அனுபவத்தின் மூலம் கவித்திறனை வெளிப்படுத்தி வரும் கருத்தான் முஹம்மது ஹுசைனுக்கு ‘கவி கருத்தான்’ எனும் பட்டத்தினை வழங்கினார். கவி கருத்தானின் ஆக்கங்கள் பதிவு செய்யப்பட்டு அவை விரைவில் நூலாக்கம் பெறும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.
பொருளாளர் என்.ஜெ. சீனி முஹம்மது நன்றி கூறினார். நிகழ்வில் முதுவை ஹிதாயத், தீன், முஜீப், செய்யது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
DSC_0053 (1)

 

Tags: , , , , ,

Leave a Reply